← Back

Avizhaai Song Lyrics

Singer : Sanjana Kalmanje Music by : Darbuka Siva Female : Udal vittu udai vittu veliyae Vidaigol uyirae… Adaipatta sadhaichirai udaithae Uyirgol uyirae… Female : Avizhaai avizhaai Idhayam avizhaai Negizhaai negizhaai Irukkangal negizhaai Female : Yetrukkuriyaai ingu Neeyillaiyae Algul mulaiyaai Ingu naan illaiyae… Female : Aadai thurandhum Nirvaanam illai Mei neengiyum Ingu maranam illai.. Female : Aagaiyaal aadu ennodu Yaavumae marandhu Aagaiyaal aadu ennodu Aadalae marundhu Rap Male : ………………………… Female : Magizhaai magizhaai Mayakkangal magizhaai Nigazhaai nigazhaai Nodiyaai nigazhaai Female : Ezhundhidum alaiyena Vizhundhidum mazhaiyena Azhudhidum mugilena aadu Adhirndhidum nilamena Udhirndhidum malarena Edhirthidum puyalena aadu Female : Kaadhal kaamam ellaam Un kaaladiyil pottu Aadum podhu neeyum Kadavul endru kaattu Female : Neeyae undhan thaalam Neeyae undhan maedai Neeyae undhan visiri Veru yaarum illai Female : Aagaiyaal aadu ennodu Yaavumae marandhu Aagaiyaal aadu ennodu Aadalae marundhu Male : ………………………… Female : Avizhaai avizhaai Muzhudhum avizhaai Negizhaai negizhaai Mezhugaai negizhaai Female : Mutham urasal ingu Veendhaanadaa Muttrum thurandhaal Naan vaan thaanadaa Female : Aanaa pennaa Naan rendum illai Paal enbadhae ini thevaiyillai Female : Aagaiyaal aadu ennodu Yaavumae marandhu Aagaiyaal aadu ennodu Aadalae marundhu Male : …………………………
பாடகர்கள் : சஞ்சனா கல்மஞ்சே இசையமைப்பாளர் : தர்புகா சிவா பெண் : உடல் விட்டு உடை விட்டு வெளியே விடைகொள் உயிரே…. அடைபட்ட சதைச்சிறை உடைத்தே உயிர்கொள் உயிரே…. பெண் : அவிழாய் அவிழாய் இதயம் அவிழாய் நெகிழாய் நெகிழாய் இறுக்கங்கள் நெகிழாய் பெண் : ஏற்றுக்குறியாய் இங்கு நீயில்லையே அல்குல் முலையாய் இங்கு நான் இல்லையே பெண் : ஆடை துறந்தும் நிர்வாணம் இல்லை மெய் நீங்கியும் இங்கு மரணம் இல்லை பெண் : ஆகையால் ஆடு என்னோடு யாவுமே மறந்து ஆகையால் ஆடு என்னோடு ஆடலே மருந்து ஆண் : …………………. பெண் : மகிழாய் மகிழாய் மயக்கங்கள் மகிழாய் நிகழாய் நிகழாய் நொடியாய் நிகழாய் பெண் : எழுந்திடும் அலையென விழுந்திடும் மழையென அழுதிடும் முகிலென ஆடு அதிர்ந்திடும் நிலமென உதிர்ந்திடும் மலரென எதிர்த்திடும் புயலென ஆடு பெண் : காதல் காமம் எல்லாம் உன் காலடியில் போட்டு ஆடும் போது நீயும் கடவுள் என்று காட்டு பெண் : நீயே உந்தன் தாளம் நீயே உந்தன் மேடை நீயே உந்தன் விசிறி வேறு யாரும் இல்லை பெண் : ஆகையால் ஆடு என்னோடு யாவுமே மறந்து ஆகையால் ஆடு என்னோடு ஆடலே மருந்து ஆண் : ……………………….. பெண் : அவிழாய் அவிழாய் முழுதாய் அவிழாய் நெகிழாய் நெகிழாய் மெழுகாய் நெகிழாய் பெண் : முத்தம் உரசல் இங்கு வீண்தானடா முற்றும் துறந்தால் நான் வான் தானடா பெண் : ஆணா பெண்ணா நான் ரெண்டும் இல்லை பால் என்பதே இனி தேவையில்லை பெண் : ஆகையால் ஆடு என்னோடு யாவுமே மறந்து ஆகையால் ஆடு என்னோடு ஆடலே மருந்து ஆண் : ………………………….