← Back

Achcham Vittu Song Lyrics

Singer : P. Susheela Music by : V. Kumar Lyrics by : Kannadasan Female : Acham vittu naanam vittu unnai ketkkiren En anbin meedhu aanaiyittu unmai ketkkiren Ennai maalaiyittu manam muditha mannan neeyandro Adhu unmai thaan andro Female : Acham vittu naanam vittu unnai ketkkiren Female : Paal kudikka vandha poonai bayandhu ponadho Illai pazhaiya kaala ninaivai ellam marandhu ponadhoo Enna enni indha neram oomaiyaanadhoo Idhayathilae enna thaan kelviyaanadhoo Female : Acham vittu naanam vittu unnai ketkkiren Female : Potti pottu pesa vandhen vaarthaigal illai Pookal kondu odi vandhen poojaiyum illai Potti pottu pesa vandhen vaarthaigal illai Pookal kondu odi vandhen poojaiyum illai Female : Thaanae kaettu pengalukku pazhakkamum illai Thaanae kaettu pengalukku pazhakkamum illai Kula tharmathilae appadiyor vazhakkamum illai Female : Acham vittu naanam vittu unnai ketkkiren Female : Thunbangalil periya thunbam kaathiruppadhu Oru thunai irundhum uravillamal paarthirupathu Inam pirindha maanai pola thanithirupathu Enna kettum badhil illamal yengi nirppadhu Female : Acham vittu naanam vittu unnai ketkkiren En anbin meedhu aanaiyittu unmai ketkkiren Ennai maalaiyittu manam muditha mannan neeyandro Adhu unmai thaan andro Female : Acham vittu naanam vittu unnai ketkkiren
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : அச்சம் விட்டு நாணம் விட்டு உன்னை கேட்கிறேன் என் அன்பின் மீது ஆணையிட்டு உண்மை கேட்கிறேன் என்னை மாலையிட்டு மணம் முடித்த மன்னன் நீயன்றோ அது உண்மைதானன்றோ…… பெண் : அச்சம் விட்டு நாணம் விட்டு உன்னை கேட்கிறேன் பெண் : பால் குடிக்க வந்த பூனை பயந்து போனதோ –இல்லை பழைய கால நினைவையெல்லாம் மறந்து போனதோ என்ன எண்ணி இந்த நேரம் ஊமையானதோ இதயத்திலே என்னதான் கேள்வியானதோ பெண் : அச்சம் விட்டு நாணம் விட்டு உன்னை கேட்கிறேன் பெண் : போட்டி போட்டு பேச வந்தேன் வார்த்தைகள் இல்லை பூக்கள் கொண்டு ஓடி வந்தேன் பூஜையும் இல்லை போட்டி போட்டு பேச வந்தேன் வார்த்தைகள் இல்லை பூக்கள் கொண்டு ஓடி வந்தேன் பூஜையும் இல்லை பெண் : தானே கேட்டு பெண்களுக்கு பழக்கமுமில்லை தானே கேட்டு பெண்களுக்கு பழக்கமுமில்லை குலதர்மத்திலே அப்படியோர் வழக்கமுமில்லை பெண் : அச்சம் விட்டு நாணம் விட்டு உன்னை கேட்கிறேன் பெண் : துன்பங்களில் பெரிய துன்பம் காத்திருப்பது ஒரு துணையிருந்தும் உறவில்லாமல் பார்த்திருப்பது இனம் பிரிந்த மானை போல தனித்திருப்பது என்ன கேட்டும் பதிலில்லாமல் ஏங்கி நிற்பது பெண் : அச்சம் விட்டு நாணம் விட்டு உன்னை கேட்கிறேன் என் அன்பின் மீது ஆணையிட்டு உண்மை கேட்கிறேன் என்னை மாலையிட்டு மணம் முடித்த மன்னன் நீயன்றோ அது உண்மைதானன்றோ…… பெண் : அச்சம் விட்டு நாணம் விட்டு உன்னை கேட்கிறேன்