← Back

Kathalukku Naalu Pakkam Song Lyrics

Singer : T. M. Soundarajan and P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female : Kaathalukku Male : Naalu pakkam Female : Kaalgalukku Male : Naalu nadai Female : Madharukku Male : Naalu gunam Female : Mai vizhikku Male : Naalu mozhi Female : Kaathalukku naalu pakkam Kaalgalukku naalu nadai Madharukku naalu gunam Mai vizhikku naalu mozhi Male : Kangalinaal eluthuvadhae mudhal pakkam Kalanthu kollum idhayangalae irandam pakkam Female : Ennuvadhai solluvadhae moondram pakkam Eeruyirum inaivadhu thaan naalam pakkam Male : Kaathalukku naalu pakkam Female : Aasai midhakaiyilae anna nadai podum Aruginil vaa vendraal chinna nadai podum Male : Kattilukku sellgaiyiilae kanni nadai podum Kaar irulil panjanaiyil enna nadai podum Female : Kaalgalukku naalu nadai Male : Kaadhalanin paarvaiyilae thalai kavilum oru gunam Kaigalukkul irukkaiyilaekan maraikkum maru gunam Female : Alli varum ninaivugalai adakki vaikkum oru gunam Anaikkaiyilae athanaiyum maranthirukkum marugunam Male : Madharukku naalu gunam Female : Thanakkul thanimaiyilae sirikkum mozhi ondru Thalaimagam kangalukkum anuppum mohi ondru Male : Aasai malar poothathu pol veesum mozhi ondru Aduthavarkku theriyaamal pesum mozhi ondru Female : Kaathalukku naalu pakkam Kaalgalukku naalu nadai Male : Madharukku naalu gunam Mai vizhikku naalu mozhi Hummming : Both ….
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே . வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : காதலுக்கு ஆண் : நாலு பக்கம் பெண் : கால்களுக்கு ஆண் : நாலு நடை பெண் : மாதருக்கு ஆண் : நாலு குணம் பெண் : மைவிழிக்கு ஆண் : நாலு மொழி பெண் : காதலுக்கு நாலு பக்கம் கால்களுக்கு நாலு நடை மாதருக்கு நாலு குணம் மைவிழிக்கு நாலு மொழி ஆண் : கண்களினால் எழுதுவதே முதல் பக்கம் கலந்து கொள்ளும் இதயங்களே இரண்டாம் பக்கம் பெண் : எண்ணுவதைச் சொல்லுவதே மூன்றாம் பக்கம் ஈருயிரும் இணைவதுதான் நாலு பக்கம் ஆண் : காதலுக்கு நாலு பக்கம் பெண் : ஆசை மிதக்கையிலே அன்னநடை போடும் அருகினில் வாவென்றால் சின்னநடை போடும் ஆண் : கட்டிலுக்குச் செல்கையிலே கன்னி நடை போடும் காரிருளில் பஞ்சணையில் என்ன நடை போடும் பெண் : கால்களுக்கு நாலு நடை ஆண் : காதலனின் பார்வையிலே தலை கவிழும் ஒரு குணம் கைகளுக்குள் இருக்கையிலே கண் மறைக்கும் மறு குணம் பெண் : அள்ளி வரும் நினைவுகளை அடக்கி வைக்கும் ஒரு குணம் அணைக்கையிலே அத்தனையும் மறந்திருக்கும் மறுகுணம் ஆண் : மாதருக்கு நாலு குணம் பெண் : தனக்குள் தனிமையிலே சிரிக்கும் மொழி ஒன்று தலைமகன் கண்களுக்கும் அனுப்பும் மொழி ஒன்று ஆண் : ஆசைமலர் பூத்ததுபோல் வீசும் மொழி ஒன்று அடுத்தவர்க்குத் தெரியாமல் பேசும் மொழி ஒன்று பெண் : காதலுக்கு நாலு பக்கம் கால்களுக்கு நாலு நடை ஆண் : மாதருக்கு நாலு குணம் மைவிழிக்கு நாலு மொழி முனகல் : இருவர் ……………