← Back

Pogum Vazhigal Song Lyrics

Singer : Anthony Daasan Music by : Pradeep Kumar and Maarten Visser Male : Laala laala laalaa Laal laala laalaalaaa Laala laala laalaa Laal laala laalaalaaa Male : Pogum vazhigal engum Dhaagam theerkkum solai naan Vaazhum malaigal engum Aruvi paadum geedham naan Male : Aduthadhai ennaamal Kidaippadhai pusidhingae Anudhinam pasi kalaippaaruven Male : Kaanum kaatchiyil Yaavum maarudhae Vaazhvin maayam enna Male : Nokkam neengiyae Yekkam indriyae Vaazhum vindhai naanae Male : Netrin ennangal Maatru vannangal Pesum minnal naanae Male : Neeril nillungal Vaanil sellungal Yaavum unmai dhaanae Male : Odum patchiyin Paadhai sellungal Pogum sorkkam dhaanae Male : Kaatrai neekkiyae Paattai paadungal Koochchal raagam dhaanae Male : Hahahaaa Male : Veyil sirippilae Enai thirakkiren Mazhai thuliyilae Enai thurakkiren Male : Nettrin nadhi yaavumae Naalai madai maaralam Kanavin nijam yaavumae Kaatril vidai thedalaam Male : Neelum malaiyaagiren Veezhum vidhaiyaagiren Vergal enai thedalaam Verum kaatril puyal seralaam Male : Kaadaai perunkaadaai Vaaraai nee vaaraai Male : Irulinai pazhagidum podhu Maraindhavai mulaithidum thozha Kadhavugal thiranthidum podhu Kadal ondru azhaithidum vaa vaa Male : Aduthadhai ennaamal Kidaippadhai pusidhingae Anudhinam pasi kalaippaaruven Male : Kaanum kaatchiyil Yaavum maarudhae Vaazhvin maayam enna Male : Vaazhum sattangal Vaazhvin vattangal Yaavum meelvadhenna Male : Nyaayam indriyae Nyaayam ondraiyae Neengal kaanbadhenna Male : Maarum ondrilae Naamum ondrena Serndhaal inbam dhaanae Male : Hahahahahaha
பாடகர் : அந்தோணி தாசன் இசை அமைப்பாளர் : பிரதீப் குமார் மற்றும் மார்டின் விஸ்ஸர் ஆண் : லாலா லாலா லாலா….(4) ஆண் : போகும் வழிகளெங்கும் தாகம் தீர்க்கும் சோலை நான் வாழும் மலைகள் எங்கும் அருவி பாடும் கீதம் நான் ஆண் : அடுத்ததை எண்ணாமல் கிடைப்பதை புசித்திங்கே அனுதினம் பசி களைப்பாறுவேன் ஆண் : காணும் காட்சியில் யாவும் மாறுதே வாழ்வின் மாயம் என்ன ஆண் : நோக்கம் நீங்கியே ஏக்கம் இன்றியே வாழும் விந்தை நானே ஆண் : நேற்றின் எண்ணங்கள் மாற்று வண்ணங்கள் பேசும் மின்னல் நானே ஆண் : நீரில் நில்லுங்கள் வானில் செல்லுங்கள் யாவும் உண்மை தானே ஆண் : ஓடும் பட்சியின் பாதை செல்லுங்கள் போகும் சொர்க்கம் தானே ஆண் : காற்றை நீக்கியே பாட்டை பாடுங்கள் கூச்சல் ராகம் தானே ஆண் : ஹாஹாஹா ….. ஆண் : வெயில் சிரிப்பிலே எனை திறக்கிறேன் மழை துளியிலே எனை துறக்கிறேன் ஆண் : நேற்றின் நதி யாவுமே நாளை மடை மாறலாம் கனவின் நிஜம் யாவுமே காற்றில் விடை தேடலாம் ஆண் : நீளும் மலையாகிறேன் வீழும் விதையாகிறேன் வேர்கள் எனை தேடலாம் வெறும் காற்றில் புயல் சேரலாம் ஆண் : காடாய் பெருங்காடாய் வாராய் நீ வாராய் ஆண் : இருளினை பழகிடும் போது மறைந்தவை முளைத்திடும் தோழா கதவுகள் திறந்திடும் போது கடல் ஒன்று அழைத்திடும் வா வா ஆண் : அடுத்தை எண்ணாமல் கிடைப்பதை புசித்திங்கே அனுதினம் பசி களைப்பாறுவேன் ஆண் : காணும் காட்சியில் யாவும் மாறுதே வாழ்வின் மாயம் என்ன ஆண் : வாழும் சட்டங்கள் வாழ்வின் வட்டங்கள் யாவும் மீள்வதென்ன ஆண் : நியாயம் இன்றியே நியாயம் ஒன்றையே நீங்கள் காண்பதென்ன ஆண் : மாறும் ஒன்றிலே நாமும் ஒன்றென சேர்ந்தால் இன்பம் தானே ஆண் : ஹாஹாஹா ….