← Back

Mangala Kannagi Song Lyrics

Singer : Vani Jayaram Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female : Mangala kannagi kunguma janaki Nalangal thulanga vilanga aniyum thaaliyaa Nadaga kaviya kaveri madhavi Mayangi kulungi arangil aniyum salangaiya Thaaliyaa..salangaiyaa Thaaliyaa..salangaiyaa Female : Manamagal ival enum deiva bandhama Female : Vilaimagal ival enum dhinasari sondhama Manamagal ival enum deiva bandhama Vilaimagal ival enum dhinasari sondhama Thaalikkum medai salangaikkum medai Irandil edhu nerumo Thalaivan oruvan valangum bandham serumo Thaaliyaa..salangaiyaa Thaaliyaa..salangaiyaa Female : Sathiyam thathuvam pongum vaazhkaiya Nithiyam methaiyil konjum vaazhkkaiya Sathiyam thathuvam pongum vaazhkaiya Nithiyam methaiyil konjum vaazhkkaiya Kalaimagal endrae marumagalaagum Punidha nilai serumo Thagatheem thagatheem enavae aada nerumo Female : Mangala kannagi kunguma janaki Nalangal thulanga vilanga aniyum thaaliyaa Nadaga kaviya kaveri madhavi Mayangi kulungi arangil aniyum salangaiya Female : Ilamai maeni idhu perumaiyodu Kollum malargalo Sabai yeri aadi nenjai Soorai aadum iru vizhigalo Female : Oru ullam thannil thannai Alli veikkum uyar angamo Malar palli meedhu seiyum Kalla kaadhal tharum sangamo Female : Kadhalum ennai marukkumo Vedhamum ennai verukkumo Nadhamae ennai anaikkumo Nallavan ullam manakkumo Female : Kalaiyo enna nilaiyoo Poruloo iraivan aruloo….
பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : கே. வி . மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : மங்கல கண்ணகி குங்கும ஜானகி நலன்கள் துலங்க விளங்க அணியும் தாலியா நாடக காவிய காவிரி மாதவி மயங்கி குலுங்கி அரங்கில் அணியும் சலங்கையா தாலியா………சலங்கையா…….. தாலியா………சலங்கையா…….. பெண் : மணமகள் இவள் எனும் தெய்வ பந்தமா பெண் : விலைமகள் இவள் எனும் தினசரி சொந்தமா மணமகள் இவள் எனும் தெய்வ பந்தமா விலைமகள் இவள் எனும் தினசரி சொந்தமா தாலிக்கும் மேடை சலங்கைக்கும் மேடை இரண்டில் எது நேருமோ தலைவன் ஒருவன் வழங்கும் பந்தம் சேருமோ தாலியா……….சலங்கையா……. தாலியா………சலங்கையா………. பெண் : சத்தியம் தத்துவம் பொங்கும் வாழ்க்கையா நித்தியம் மெத்தையில் கொஞ்சும் வாழ்க்கையா சத்தியம் தத்துவம் பொங்கும் வாழ்க்கையா நித்தியம் மெத்தையில் கொஞ்சும் வாழ்க்கையா கலைமகள் என்றே மருமகளாகும் புனித நிலை சேருமோ தகதீம் தகதீம் எனவே ஆட நேருமோ பெண் : மங்கல கண்ணகி குங்கும ஜானகி நலன்கள் துலங்க விளங்க அணியும் தாலியா நாடக காவிய காவிரி மாதவி மயங்கி குலுங்கி அரங்கில் அணியும் சலங்கையா பெண் : இளமை மேனி இது பெருமையோடு கொள்ளும் மலர்களோ சபை ஏறி ஆடி நெஞ்சை சூறை ஆடும் இரு விழிகளோ பெண் : ஒரு உள்ளம் தன்னில் தன்னை அள்ளி வைக்கும் உயர் அங்கமோ மலர் பள்ளி மீது செய்யும் கள்ளக் காதல் தரும் சங்கமோ பெண் : காதலும் என்னை மறுக்குமோ……… வேதமும் என்னை வெறுக்குமோ…….. நாதமே என்னை அணைக்குமோ……… நல்லவன் உள்ளம் மணக்குமோ………. பெண் : கலையோ என்ன நிலையோ பொருளோ இறைவன் அருளோ……….!