← Back

Anandam Pongida Song Lyrics

Singers : K. J. Yesudas and Sunandha Music by : Ilayaraja Female : Aanandham pongida pongida pongida Kaadhal salangaigal kaadhil olikkudhadi Male : Maegangal thaalangal maelangal kottida Aadum ila mayil thogai virikkudhadi Female : Vaan mazhai pol thulli vaa vaa vaa aa… Male : Aanandham pongida pongida pongida Kaadhal salangaigal kaadhil olikkudhadi Chorus : Laali laali suba laali laali Laali laali suba laali laali Female : Poovodu manjal undu Ennaalum inbam undu Chorus : Laali laali suba laali laali Laali laali suba laali laali Female : Kannaana kanmanikkum Kalyaana maappillaikkum Chorus : Laali laali suba laali laali Laali laali suba laali laali Male : Maalai ilam thendral aalai mayakkudhu Solai kuyil vandhu sollum mozhi yedhuvo Thaeril ulaa varum dhaeva isai kuyil Naeril ulaa varum naeram yedhu idhuvo Naeram andhi naeram geetham vandhu saerum Female : Aadaigal moodiya maeniyil suyamvaram Aayiram aayiram aasaigal sugam perum Naan arugae varavo manam urugida Male : Aanandham pongida pongida pongida Kaadhal salangaigal kaadhil olikkudhadi Female : Thorana vaasalil thanga radhangalum Thozhigalum ennai soozha valam varuvaen Vaanavillai angu kaanavillai endru Maegam alaindhida dhaegam thanil anivaen Kangal unnai thaedum kaalgal thulli odum Male : En manam un manam aanadhu oru manam Indhira boomiyl innoru thirumanam Poo mugamae sugamae ini dhinam dhinam Female : Aanandham pongida pongida pongida Kaadhal salangaigal kaadhil olikkudhadi Male : Maegangal thaalangal maelangal kottida Aadum ila mayil thogai virikkudhadi Female : Vaan mazhai pol thulli vaa Male : Vaa vaa aa… Female : Aanandham pongida pongida pongida Kaadhal salangaigal kaadhil olikkudhadi Chorus : Laali laali suba laali laali Laali laali suba laali laali Laali laali suba laali laali
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் சுனந்தா இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி.. ஆண் : மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட ஆடும் இளமயில் …தோகை விரிக்குதடி பெண் : வான்மழை போல் துள்ளி வா வா.. வா..ஆ..ஆ.. ஆண் : ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி.. குழு : லாலி லாலி சுப லாலி லாலி லாலி லாலி சுப லாலி லாலி பெண் : பூவோடு மஞ்சள் உண்டு எந்நாளும் இன்பம் உண்டு.. குழு : லாலி லாலி சுப லாலி லாலி லாலி லாலி சுப லாலி லாலி பெண் : கண்ணான கண்மணிக்கும் கல்யாண மாப்பிள்ளைக்கும் குழு : லாலி லாலி சுப லாலி லாலி லாலி லாலி சுப லாலி லாலி ஆண் : மாலை இளம் தென்றல் ஆளை மயக்குது சோலை குயில் வந்து சொல்லும் மொழி எதுவோ.. தேரில் உலா வரும் தேவ இசை குயில் நேரில் உலா வரும் நேரம் எது இதுவோ… நேரம் அந்தி நேரம்..கீதம் வந்து சேரும்.. பெண் : ஆடைகள் மூடிய மேனியில் சுயம்வரம் ஆயிரம் ஆயிரம்..ஆசைகள் சுகம் பெறும் நான் அருகே…..வரவோ …..மனம் உருகிட… ஆண் : ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி.. பெண் : தோரண வாசலில் தங்கரதங்களும் தோழிகளும் என்னை சூழ வலம் வருவேன் வானவில்லை அங்கு காணவில்லை என்று மேகம் அலைந்திட தேகம் தனில் அணிவேன்… கண்கள் உன்னை தேடும்..கால்கள் துள்ளி ஓடும்.. ஆண் : என் மனம் உன் மனம் ஆனது ஒரு மனம்… இந்திர பூமியில் இன்னொரு திருமணம் பூ முகமே சுகமே..இனி தினம் தினம்.. பெண் : ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி.. ஆண் : மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட ஆடும் இளமயில் தோகை விரிக்குதடி பெண் : வான்… மழை போல் துள்ளி வா .. ஆண் : வா.. வா..ஆ..ஆ..ஆ.. பெண் : ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி.. குழு : லாலி லாலி சுப லாலி லாலி லாலி லாலி சுப லாலி லாலி லாலி லாலி சுப லாலி லாலி…..