← Back

Iraivan Irukkindrana Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : R. Parthasarathi Male : Iraivan irukkindraanaa… aa… Iraivan irukkindraanaa… Manidhan ketkiraan Avan irundhaal ulagathilae Engae vaazhgiraan Engae vaazhgiraan Male : Naan aathiganaanen Avan agappadavillai Naan naathiganaanen Avan bayappadavillai Female : Manidhan irukkindraanaa… aa… Manidhan irukkindraanaa… Iraivan ketkiraan Avan irundhaal ulagathilae Engae vaazhgiraan Engae vaazhgiraan Female : Naan anbu kaattinen Avan aatkollavaillai Indha thunbam theerkkavum Avan thunai varavillai Chorus : ……………………. Female : Kannilae urudhi illai Kaadhalukkor needhiyillai Oru naal irundha manam Maru naal irukkavillai Kudisaiyil or manadhu Gopuratthil or manadhu Koodaadha serkkai ellaam Koodinaal pala manadhu Female : Manidhan irukkindraanaa… aa… Male : Paarppavan kurudanadi Padippavan moodanadi Ulladhai solbavanae Ulagathil pithanadi Neero kodhikkudhadi Neruppo kulirudhadi Venmaiyai karumai endru Kannaadi kaattudhadi Male : Iraivan irukkindraanaa… aa.. Chorus : …………………………. Female : Ondraiyae ninaithirundhum Ondraaga vaazhndhirundhum Pennaaga pirandhavarai Kannaaga yaar ninaithaar Irundhaal irundha idam Illaiyael marandhu vidum Ivar thaan manidharendraal Iyarkaiyum nindru vidum Female : Manidhan irukkindraanaa… aa… Male : Sandhaegam pirandhu vittaal Sathiyamum palippadhillai Sathiyathai kaappavarum Saatchi solla varuvadhillai Vazhakkum mudiyavillai Manidharin theerppum illai Manidhanai marandhu vittu Vaazhbavan iraivan illai Male : Iraivan irukkindraanaa… aa… Female : Manidhan irukkindraanaa… aa.. Male : Iraivan irukkindraanaa… Manidhan ketkiraan Female : Avan irundhaal ulagathilae Engae vaazhgiraan Engae… vaazhgiraan…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : ஆர். பார்த்தசாரதி ஆண் : இறைவன் இருக்கின்றானா… ஆ… இறைவன் இருக்கின்றானா… மனிதன் கேட்கிறான் அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான் எங்கே வாழ்கிறான் ஆண் : நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை பெண் : மனிதன் இருக்கிறானா… ஆ….ஆ….. மனிதன் இருக்கிறானா…..ஆ…. இறைவன் கேட்கிறான் அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான் எங்கே வாழ்கிறான் பெண் : நான் அன்பு காட்டினேன் அவன் ஆட்கொள்ளவில்லை இந்தத் துன்பம் தீர்க்கவும் அவன் துணை வரவில்லை குழு : ……………………………. பெண் : கண்ணிலே உறுதி இல்லை காதலுக்கோர் நீதியில்லை ஒரு நாள் இருந்த மறு நாள் இருக்கவில்லை குடிசையில் ஓர் மனது கோபுரத்தில் ஓர் மனது கூடாத சேர்க்கை எல்லாம் கூடினால் பல மனது பெண் : மனிதன் இருக்கிறானா… ஆ… ஆண் : பார்ப்பவன் குருடனடி படிப்பவன் மூடனடி உள்ளதை சொல்பவனே உலகத்தில் பித்தனடி நீரோ கொதிக்குதடி நெருப்போ குளிருதடி வெண்மையைக் கருமை என்று கண்ணாடி காட்டுதடி ஆண் : இறைவன் இருக்கின்றானா… ஆ… பெண் : ஒன்றையே நினைத்திருந்தும் ஒன்றாக வாழ்ந்திருந்தும் பெண்ணாகப் பிறந்தவரை கண்ணாக யார் நினைத்தார் இருந்தால் இருந்த இடம் இல்லையேல் மறந்து விடும் இவர்தான் மனிதரென்றால் இயற்கையும் நின்று விடும் பெண் : மனிதன் இருக்கிறானா… ஆ… ஆண் : சந்தேகம் பிறந்து விட்டால் சத்தியமும் பலிப்பதில்லை சத்தியத்தைக் காப்பவரும் சாட்சி சொல்ல வருவதில்லை வழக்கும் முடியவில்லை மனிதரின் தீர்ப்பும் இல்லை மனிதனை மறந்து விட்டு வாழ்பவன் இறைவன் இல்லை ஆண் : இறைவன் இருக்கின்றானா……ஆ…. பெண் : மனிதன் இருக்கிறானா……ஆ…. ஆண் : இறைவன் இருக்கின்றானா… மனிதன் கேட்கிறான் பெண் : அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான் எங்கே… வாழ்கிறான்…