← Back

Vellai Manam Konda Song Lyrics

Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : V. Kumar Lyrics by : Aalangudi Somu Male : Vellai manam konda pillai onnu Vaedikkai kattudhu thokkaminnu Vellai manam konda pillai onnu Vaedikkai kattudhu thokkaminnu Mullai saramae chella killiyae Kanmoodi thoongamma kanmoodi thoongamma Aararo aareeroo aareeroo aariraaro Male : Kaatradikudhu mazhaiyum kottudhu Olai kudisaiyilae Ingu kattilum illai methaiyum illai Unakkum thookkam illai Male : Kaasum illai padippum illai Anbukku panjam illai Unnai kaalam ingae anuppi vecha Kanakkum puriyavillai Male : Vellai manam konda pillai onnu Vaedikkai kattudhu thokkaminnu Mullai saramae chella killiyae Kanmoodi thoongamma kanmoodi thoongamma Male : Thookku kayittrai thottil kayiraai Maatra vandhaayo Andha thookkathukku thadai vidhichi Paarkka vandhaayoo Male : Thunbathilae sirikka solli Rasikka vandhaayoo Deivam onnu irukkudhinnu Katta vandhaaiyoo Aararo aareeroo aareeroo aariraaro Female : Vellai manam konda pillai onnu Vaedikkai kattudhu thokkaminnu Mullai saramae chella killiyae Kanmoodi thoongamma kanmoodi thoongamma Aararo aareeroo aareeroo aariraaro
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு ஆண் : வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு வேடிக்கை காட்டுது தூக்கமின்னு வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு வேடிக்கை காட்டுது தூக்கமின்னு முல்லைச் சரமே செல்லக் கிளியே கண்மூடித் தூங்கம்மா கண்மூடித் தூங்கம்மா ஆராரோ ஆரீரோ ஆரீரோ ஆரிரரோ ஆண் : காற்ற‌டிக்கிது ம‌ழையும் கொட்டுது ஓலைக் குடிசையிலே இங்கு க‌ட்டிலுமில்லை மெத்தையுமில்லை உன‌க்கும் தூக்க‌ம் இல்லை ஆண் : காசுமில்லை ப‌டிப்புமில்லை அன்புக்கு ப‌ஞ்ச‌மில்லை உன்னைக் காலமிங்கே அனுப்பி வச்ச க‌ண‌க்கும் புரிய‌வில்லை ஆண் : வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு வேடிக்கை காட்டுது தூக்கமின்னு முல்லைச் சரமே செல்லக் கிளியே கண்மூடித் தூங்கம்மா கண்மூடித் தூங்கம்மா ஆண் : தூக்குக் கயிற்றை தொட்டில் கயிறாய் மாற்ற வந்தாயோ அந்த தூக்கத்துக்கு தடை விதிச்சி பார்க்க வந்தாயோ ஆண் : துன்பத்திலே சிரிக்கச் சொல்லி ரசிக்க வந்தாயோ தெய்வம் ஒண்ணு இருக்குதின்னு காட்ட வந்தாயோ ஆராரோ ஆரீரோ ஆரீரோ ஆரிர‌ரோ பெண் : வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு வேடிக்கை காட்டுது தூக்கமின்னு முல்லைச் சரமே செல்லக் கிளியே கண்மூடித் தூங்கம்மா கண்மூடித் தூங்கம்மா ஆராரோ ஆரீரோ ஆரீரோ ஆரிரரோ