← Back

Ange Siripavargal Song Lyrics

Singer : T.M. Soundararajan Music by : M.S. Viswanathan Male : { Angae Siripavargal Sirikattum adhu Aanava siripu Male : Ingae nee Sirikum pon siripo Aanantha siripu } (2) Male : { Nalla theerpai Ulagam sollum naal Varumbodhu andru Siripathu yaar azhuvathu Yaar theriyum appothu } (2) Male : Angae Siripavargal Sirikattum adhu Aanava siripu ….. Aanava siripu Male : { Vayiru valika Siripavargal manitha Jaadhi pirar vayiru Eriya siripavargal Miruga jaadhi } (2) Male : Manithan endra Porvaiyil mirugam Vaazhum naatilae Male : Neethiendrum Nermai endrum { Ezhuthi vaipaar yettilae } (2) Male : Angae Siripavargal Sirikattum adhu Aanava siripu Male : Ingae nee Sirikum pon siripo Aanantha siripu Male : { Naanal polae Valaivathuthaan Sattam ahuma adhai Valaipadharku valakkarignar Pattam venuma } (2) Male : Tharma thaayin Pillaigal thaayin kannai Maraipadha Male : Unmai thannai Oomaiyaaki { Thalaikuniya vaipadha } (2) Male : Angae Siripavargal Sirikattum adhu Aanava siripu ….. Aanava siripu Male : { Thottam kaaka Pota veli payirai thindradho Adhai kelvi keka aal illamal Paarthu nippadho } (2) Male : Naan oru kai paarkiren Neram varum ketkiren Poonai alla pulli thaan Endru poga poga kaatukiren Poga poga kaatukiren
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : { அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு ஆண் : இங்கே நீ சிரிக்கும் பொன் சிரிப்போ ஆனந்த சிரிப்பு } (2) ஆண் : { நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது அன்று சிரிப்பது யார் அழுவது யார் தெரியும் அப்போது } (2) ஆண் : அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு ஆணவ சிரிப்பு ஆண் : { வயிறு வலிக்க சிரிப்பவர்கள் மனித ஜாதி பிறர் வயிறு எரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி } (2) ஆண் : மனிதன் என்ற போர்வையில் மிருகம் வாழும் நாட்டிலே ஆண் : நீதி என்றும் நேர்மை என்றும் { எழுதி வைப்பார் ஏட்டிலே } (2) ஆண் : அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு ஆண் : இங்கே நீ சிரிக்கும் பொன் சிரிப்போ ஆனந்த சிரிப்பு ஆண் : { நாணல் போல வளைவதுதான் சட்டம் ஆகுமா அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா } (2) ஆண் : தர்ம தாயின் பிள்ளைகள் தாயின் கண்ணை மறைப்பதா ஆண் : உண்மை தன்னை ஊமையாக்கி { தலைகுனிய வைப்பதா } (2) ஆண் : அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு ஆணவ சிரிப்பு ஆண் : { தோட்டம் காக்க போட்ட வேலி பயிரை தின்றதோ அதை கேள்வி கேக்க ஆள் இல்லாமல் பார்த்து நிப்பதோ } (2) ஆண் : நான் ஒரு கை பார்க்கிறேன் நேரம் வரும் கேட்கிறேன் பூனை அல்ல புலி தான் என்று போக போக காட்டுகிறேன் போக போக காட்டுகிறேன்