← Back

Kadhal Sariththiraththai Padikka Vaarungal Song Lyrics

Singers : P. Susheela and T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Female : Kaadhal sarithirathai padikka vaarungal Aasai arangaeri nadikka vaarungal Kaadhal sarithirathai padikka vaarungal Aasai arangaeri nadikka vaarungal Female : {Megathai oonjalittu aadai vaitha Maeni ingae Mogathai aadai ittu moodi vaitha Raani ingae} (2) Kodhikkum kodai thanikkum vaelai Kadai kan jaadai thodukkum paavai Female : Kaadhal sarithiratthai padikka vaarungal Aasai arangaeri nadikka vaarungal Male : Valai kai kondu valaikkum chendu Sevvila neerai idai thaangum ilam vaazhai thandu Valai kai kondu valaikkum chendu Sevvila neerai idai thaangum ilam vaazhai thandu Malar thaer ondru pani kan kondu Than maharaajan kudiyaera varum naeram indru Male : Kodikkul aadaum kanikkul oorum Inikkum saaram kidaikkum kaalam Male : Aanandha naadagathai Aada vandha paathirangal Aaramba naalai Enni kaathirukkum naethirangal Male : Kaadhal sarithirathai padikka vandhaayo Aasai arangaeri nadikka vandhaayo Female : Iyarkkai kaatchi namakkor saatchi Nam raajaangam naal thorum radhi dhevan aatchi Idhazh vaai thirandhu eduthaen virundhu En malar maeni nogaamal medhuvaaga arundhu Female : Pani pul meedhu padukkai pottu Manikkum kavidhai manam pol theettu Male : Malai mael nindru kalai maan ondru Un vizhi paarthu vilangaamal vazhi maarum indru Female : Mazhai neer kondu mughil pol vandhu Senthalir poovai thaalaattu thalaivaa nee indru Male : Silirkkum angam sivakkum vannam Female : Anaikkum podhu mayangum maadhu Kaadhal sarithirathai padikka vaarungal Aasai arangaeri nadikka vaarungal Both : Aahaahaa… aahaahaa… aahaahaa…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள் ஆசை அரங்கேறி நடிக்க வாருங்கள் காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள் ஆசை அரங்கேறி நடிக்க வாருங்கள் பெண் : {மேகத்தை ஊஞ்சலிட்டு ஆட வைத்த மேனி இங்கே மோகத்தை ஆடையிட்டு மூடி வைத்த ராணி இங்கே} (2) கொதிக்கும் கோடை தணிக்கும் வேளை கடைக்கண் ஜாடை தொடுக்கும் பார்வை பெண் : காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள் ஆசை அரங்கேறி நடிக்க வாருங்கள் ஆண் : வளைக் கைக்கொண்டு வளைக்கும் செண்டு செவ்விளநீரை இடைத் தாங்கும் இளம் வாழைத்தண்டு வளைக் கைக்கொண்டு வளைக்கும் செண்டு செவ்விளநீரை இடைத் தாங்கும் இளம் வாழைத்தண்டு மலர் தேன் உண்டு பனிக்கண் கொண்டு தன் மகராஜன் குடியேற வரும் நேரம் இன்று ஆண் : கொடிக்குள் ஆடும் கனிக்குள் ஊறும் இனிக்கும் சாரம் கிடைக்கும் காலம் ஆண் : ஆனந்த நாடகத்தை ஆட வந்த பாத்திரங்கள் ஆரம்ப நாளை எண்ணி காத்திருக்கும் நேத்திரங்கள் ஆண் : காதல் சரித்திரத்தை படிக்க வந்தாயோ ஆசை அரங்கேறி நடிக்க வந்தாயோ பெண் : இயற்கை காட்சி நமக்கோர் சாட்சி நம் ராஜாங்கம் நாள்தோறும் ரதிதேவன் ஆட்சி இதழ் வாய் திறந்து எடுத்தேன் விருந்து என் மலர்மேனி நோகாமல் மெதுவாக அருந்து பெண் : பனிப்புல் மீது படுக்கைப்போட்டு மணக்கும் கவிதை மனம்போல் தீட்டு ஆண் : மலைமேல் நின்று கலைமான் ஒன்று உன் விழிப்பார்த்து விளங்காமல் வழிமாறும் இன்று பெண் : மழைநீர் கொண்டு முகில் போல் வந்து செந்தளிர் பூவை தாலாட்டு தலைவா நீ இன்று ஆண் : சிலிர்க்கும் அங்கம் சிவக்கும் வண்ணம் பெண் : அணைக்கும்போது மயங்கும் மாது காதல் சரித்திரத்தை படிக்க வாருங்கள் ஆசை அரங்கேறி நடிக்க வாருங்கள் இருவர் : ஆஹாஹா ஆஹஅஹா ஆஹஅஹா…..