← Back

Samudhaya Veedhiyile Song Lyrics

Singer : P. Susheela Music by : V. Kumar Lyrics by : Vaali Female : Samuthaaya veedhiyilae naan sigappu vilakku Samuthaaya veedhiyilae naan sigappu vilakku Indru kadhaiyaaga vilaipogum kadai sarakku Enna solla yaedhu solla Enna solla yaedhu solla Vetkkakedu veliyil solla Female : Samuthaaya veedhiyilae naan sigappu vilakku Female : Manjalodum manamaalaiyodum Manaiviyendru naan sendra neram Nenjil ninaithaen pudhu veedu endru Nenjil ninaithaen pudhu veedu endru Neril kandaen podhu veedu endru Female : Kelikku porulaanaen Avan kelvikku idamaanaan Enna solla yaedhu solla Vetkkakkedu veliyil solla Female : Samuthaaya veedhiyilae naan sigappu vilakku Female : Vaazhvu thodangum mudhal naalin iravu Vasanthamalla naan paarththa uravu Muthatham sintha edhirpaarththu nindraen Muthatham sintha edhirpaarththu nindraen Madhuvai eduththaan idhazhoram vaarththaan Idhzhoram vaarththaan Female : Mayakkaththil aazhththi vittaan Manam pola aatti vaithathaan Enna solla yaedhu solla Vetkkakkedu veliyil solla Female : Samuthaaya veedhiyilae naan sigappu vilakku Female : Ennai eduthaen virunthaaga vaithaen Virunthai eduthaan vilaikku koduththaan Kattiya thaali oruvanukendraen Kattiya thaali oruvanukendraen Kattil paavai varupavarkendraan Female : Naalum izhanthu vittaen Indru nadai pinam aagi vittaen Nadai pinam aagi vittaen Enna solla yaedhu solla Vetkkakkedu veliyil solla Female : Samuthaaya veedhiyilae naan sigappu vilakku
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி பெண் : சமுதாய வீதியிலே நான் சிகப்பு விளக்கு சமுதாய வீதியிலே நான் சிகப்பு விளக்கு இன்று கதையாக விலைபோகும் கடை சரக்கு என்ன சொல்ல ஏது சொல்ல என்ன சொல்ல ஏது சொல்ல வெட்கக்கேடு வெளியில் சொல்ல பெண் : சமுதாய வீதியிலே நான் சிகப்பு விளக்கு பெண் : மஞ்சளோடும் மணமாலையோடும் மனைவியென்று நான் சென்ற நேரம் நெஞ்சில் நினைத்தேன் புது வீடு என்று நெஞ்சில் நினைத்தேன் புது வீடு என்று நேரில் கண்டேன் பொது வீடு என்று பெண் : கேலிக்கு பொருளானேன் அவன் கேள்விக்கு இடமானான் என்ன சொல்ல ஏது சொல்ல வெட்கக்கேடு வெளியில் சொல்ல….. பெண் : சமுதாய வீதியிலே நான் சிகப்பு விளக்கு பெண் : வாழ்வு தொடங்கும் முதல் நாளின் இரவு வசந்தமல்ல நான் பார்த்த உறவு முத்தம் சிந்த எதிர்ப்பார்த்து நின்றேன் முத்தம் சிந்த எதிர்ப்பார்த்து நின்றேன் மதுவை எடுத்தான் இதழோரம் வார்த்தான் இதழோரம் வார்த்தான் பெண் : மயக்கத்தில் ஆழ்த்தி விட்டான் மனம் போல ஆட்டி வைத்தான் என்ன சொல்ல ஏது சொல்ல வெட்கக்கேடு வெளியில் சொல்ல…… பெண் : சமுதாய வீதியிலே நான் சிகப்பு விளக்கு பெண் : என்னை எடுத்தேன் விருந்தாக வைத்தேன் விருந்தை எடுத்தான் விலைக்கு கொடுத்தான் கட்டிய தாலி ஒருவனுக்கென்றேன் கட்டிய தாலி ஒருவனுக்கென்றேன் கட்டில் பாவை வருபவர்க்கென்றான் பெண் : நாலும் இழந்து விட்டேன் இன்று நடைப் பிணம் ஆகி விட்டேன் நடைப் பிணம் ஆகி விட்டேன் என்ன சொல்ல ஏது சொல்ல வெட்கக்கேடு வெளியில் சொல்ல பெண் : சமுதாய வீதியிலே நான் சிகப்பு விளக்கு