← Back

Deviyaval Mangalyam Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : Deviyaval maangalyam Thirudi manamudiththaen Deiva thirumagalin Karpinaiyae naan koduththaen Male : Kovilaiyum yaemattri Kulamagalai yaemaattri Paavam naan seithatharkku Pazhi theerththaal deviyammaa Male : Paavaththil vilai thannai Pettruk kondaen Nalla paadaththai enakkullae Kattrukkondaen Male : Deivaththai ariyaamal Pagaiththu kondaen Manam thirunthi vittaen Ammaa varunthi vittaen Male : Deivaththai ariyaamal Pagaiththu kondaen Manam thirunthi vittaen Ammaa varunthi vittaen Male : Paavaththin vilai thannai Pettrukkondaen Nalla paadaththai enakkullae Kattru kondaen Male : Thaalikkaiyiru ennai sudugindrathu Antha thavaru en aayul varai varugindrathu Thaalikkaiyiru ennai sudugindrathu Antha thavaru en aayul varai varugindrathu Male : Pothum naan seitha kuttram purigindrathu Aavi poe aval kaalgalil vizhugindrathu Pothum naan seitha kuttram purigindrathu Aavi poe aval kaalgalil vizhugindrathu Amma….devi….amma….devi….
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : தேவியவள் மாங்கல்யம் திருடி மணமுடித்தேன் தெய்வத் திருமகளின் கற்பினையே நான் கொடுத்தேன் ஆண் : கோவிலையும் ஏமாற்றி குல மகளை ஏமாற்றி பாவம் நான் செய்ததற்கு பழித் தீர்த்தாள் தேவியம்மா ஆண் : பாவத்தின் விலை தன்னை பெற்றுக் கொண்டேன் நல்ல பாடத்தை எனக்குள்ளே கற்றுக் கொண்டேன் ஆண் : தெய்வத்தை அறியாமல் பகைத்துக் கொண்டேன் மனம் திருந்தி விட்டேன் அம்மா வருந்தி விட்டேன் ஆண் : தெய்வத்தை அறியாமல் பகைத்துக் கொண்டேன் மனம் திருந்தி விட்டேன் அம்மா வருந்தி விட்டேன் ஆண் : பாவத்தின் விலை தன்னை பெற்றுக் கொண்டேன் நல்ல பாடத்தை எனக்குள்ளே கற்றுக் கொண்டேன் ஆண் : தாலிக்கயிறு என்னை சுடுகின்றது அந்த தவறு என் ஆயுள் வரை வருகின்றது தாலிக்கயிறு என்னை சுடுகின்றது அந்த தவறு என் ஆயுள் வரை வருகின்றது ஆண் : போதும் நான் செய்த குற்றம் புரிகின்றது ஆவி போய் அவள் கால்களில் விழுகின்றது போதும் நான் செய்த குற்றம் புரிகின்றது ஆவி போய் அவள் கால்களில் விழுகின்றது அம்மா…..தேவி…..அம்மா…….தேவி…….