← Back

Raasave Unna Nambi Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Ahaa..ohooo..ooo..hooo Ahaa..ohooo..ooo..hooo Hoo…hooo..hooo..oooo Female : Raasaavae onna nambi Intha rosapoo irukuthunga Oru vartha solliteenga Athu usura vandhu urukudhunga Female : Vandhu sollatha orava Iva nenjodu valatha Athu thapana karuthaaa… Thaneeril yezhutha Female : Raasaavae onna nambi Intha rosapoo irukuthunga Female : Palasa marakalayae Paavi maga nenju thudikithu Onnaiyum ennaiyum vechu Ooru sanam kummi adikuthu Female : Adadaa enakaga Aruma koranjeega Dharuma maharasa Thalaya kavundheega Female : Kalangam vanthalenna paaru Athukkum nelanuthan peru Ada manthayila ninnalumae Veera paandi theru Female : Raasaavae onna nambi Intha rosapoo irukuthunga Female : Kathula neracha mudi Kannathila kuthuthu kuthuthu Suzhiyila padagu pola Em manasu suthuthu suthuthu Female : Paruvam theriyaama Mazhaiyum pozhinjachu Vevaram theriyaama Manasum nenanjachu Female : Unaku vechuirukken moochu Ethuku intha gathi aachu Ada kannu kathu mooku vechu Oorukulla pechu Female : Raasaavae onna nambi Intha rosapoo irukuthunga Oru vartha solliteenga Athu usura vandhu urukudhunga Female : Vandhu sollatha orava Iva nenjodu valatha Athu thapana karuthaaa… Thaneeril yezhutha Female : Raasaavae onna nambi Intha rosapoo irukuthunga
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஆ..அ..அ ஆஆ..அ..அ ஆஆ…ஆஆ…ஆஆ..ஆ பெண் : ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க பெண் : வந்து சொல்லாத உறவை இவ நெஞ்சோடு வளர்த்தா அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுத்தா பெண் : ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க பெண் : பழசை மறக்கலையே பாவி மக நெஞ்சு துடிக்குது உன்னையும் என்னையும் வச்சு ஊரு சனம் கும்மி அடிக்குது பெண் : அடடா எனக்காக அருமை கொறஞ்சீக தரும மகராசா தலைய கவுந்தீக பெண் : களங்கம் வந்தால் என்ன பாரு அதுக்கும் நிலான்னு தான் பேரு அட மந்தையிலே நின்னாலும் நீ வீரபாண்டி தேரு பெண் : ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க பெண் : காதுல நரைச்ச முடி கன்னத்துல குத்துது குத்துது சுழியில படகு போல என் மனசு சுத்துது சுத்துது பெண் : பருவம் தெரியாம மழையும் பொழிஞ்சாச்சு வெவரம் தெரியாம மனசும் நனைஞ்சாச்சு பெண் : உனக்கே வச்சிருக்கேன் மூச்சு எதுக்கு இந்த கதி ஆச்சு அட கண்ணு காது மூக்கு வச்சு ஊருக்குள்ளே பேச்சு பெண் : ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க பெண் : வந்து சொல்லாத உறவை இவ நெஞ்சோடு வளர்த்தா அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுத்தா பெண் : ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க