← Back

Neeyum Isaiyum Song Lyrics

Singers : Yazin Nizar and Madhura Dhara Talluri Music by : Arvind Mano Male : Neeyum isaiyum indri ulagam Ulagamillaiyae Kaalam karaiya dhooram maraiya Kaathukkidakkiren Male : Aayiram naal nilavo Or nodiyil anaindhida Meendum ingae udhithida Kaathukkidakkiren Male : Aadhi enavum andham enavum Unai ninaithirundhen Paadhi vazhiyin pirivu mudiya Kaathukkidakkiren Male : Natpukkullae …..natpukkullae Andru vidhaitha nodigalo Yugangalaai indru valarndhu kidakka Kanavilae neeyum varaindha maaligai Isaiyilae ingu naanum nirappa Male : Ninaivilae kidakkavaa Kanavinai marandhuvidavaa… Valiyilae vasikkavaa Unadhu badhilukku Naan kaathukkidakkiren…. Female : Hmm mm mm Hmm mm mm Hmm mm mm mm mm mm Hmm mm mm Hmm mm mm Hmm mm mm mm mm mm mm mm Female : Kaadhal endru andru Nee sonna nodiyinil Udaindhadhae endhan Ulagam muzhudhum Female : Dhooram sendru Adhai yosikkum pozhudhinil Kuzhambudhae endhan Ilaiya manadhum Female : Theliyavae idam kodu Adhuvarai porumai kolladaa Kanavinai thodarndhidu Enadhu mudivukku Naan kaathukkidakkiren…. Male : Vaanai thirandhu endhan nilavu MeeNdum udhikkudhae Female : Nenjam thirandhu ennul nuzhaindhu Thulli kudhikkudhae Male : Oviyamaai oru naal Female : Paadal ena oru naal Male : Thoorigaiyum isaiyum Female : Koodi kalandhadhae Male : Boomi muzhudhum kaadhal perugi Vazhiyudhu uyirae Female : Vaazhkkai ezhudhum ezhudhugolil Inbam niraiyudhae
பாடகர்கள் : யாழின் நிசார் மற்றும் மதுரா தாரா தல்லூரி இசை அமைப்பாளர் : அரவிந்த் மனோ ஆண் : நீயும் இசையும் இன்றி உலகம் உலகமில்லையே காலம் கரைய தூரம் மறைய காத்துக்கிடக்கிறேன் ஆண் : ஆயிரம் நாள் நிலவோ ஓர் நொடியில் அணைந்திட மீண்டும் இங்கே உதித்திடக் காத்துக்கிடக்கிறேன் ஆண் :ஆதி எனவும் அந்தம் எனவும் உனை நினைத்திருந்தேன் பாதி வழியின் பிரிவு முடியக் காத்துக்கிடக்கிறேன் ஆண் : நட்புக்குள்ளே …நட்புக்குள்ளே அன்று விதைத்த நொடிகளோ யுகங்களாய் இன்று வளர்ந்து கிடக்க கனவிலே நீயும் வரைந்த மாளிகை இசையிலே இங்கு நானும் நிரப்ப ஆண் : நினைவிலே கிடக்கவா.. கனவினை மறந்துவிடவா.. வலியிலே வசிக்கவா… உனது பதிலுக்கு நான் காத்துக்கிடக்கிறேன்… பெண் : ……………………………. பெண் : காதல் என்று அன்று நீ சொன்ன நொடியினில் உடைந்ததே எந்தன் உலகம் முழுதும் பெண் : தூரம் சென்று அதை யோசிக்கும் பொழுதினில் குழம்புதே எந்தன் இளைய மனதும் பெண் : தெளியவே இடம் கொடு அதுவரை பொறுமை கொள்ளடா கனவினைத் தொடர்ந்திடு எனது முடிவுக்கு நான் காத்துக்கிடக்கிறேன்… ஆண் : வானைத் திறந்து எந்தன் நிலவு மீண்டும் உதிக்குதே பெண் : நெஞ்சம் திறந்து என்னுள் நுழைந்து துள்ளிக் குதிக்குதே ஆண் : ஓவியமாய் ஒரு நாள் பெண் : பாடல் என ஒரு நாள் ஆண் : தூரிகையும் இசையும் பெண் : கூடிக் கலந்ததே.. ஆண் : பூமி முழுதும் காதல் பெருகி வழியுது உயிரே பெண் : வாழ்க்கை எழுதும் எழுதுகோலில் இன்பம் நிறையுதே..