← Back

Nenjellam Song Lyrics

Singers : G. V. Prakash Kumar and Sivaangi Music by : Shabir Lyrics by : Madhan Karky Both : Nenjellam modhi modhi Enil paainthidum kaadhalae Pesaatha vaasam polae Enil paainthidum kaadhalae Humming : …………………… Whistling : …………….. Male : Idhan munnae sindhaadha mazhaiyae Idhayathil yen veezhgiraai Female : Idhan munnae nillaadha nodiyae Yugam ondraai yen neelgiraai Male : Uravedhum illaamal Kurai yedhum sollaamal Thaniyaga vaazhnthenae Piragunnai kandenae Female : Endhan boomi nee endru Kadal yaavum nee endru Unai kandu kondenae Enil ooru kondenae Both : Nenjellam modhi modhi Enil paainthidum kaadhalae Pesaatha vaasam polae Enil paainthidum kaadhalae Both : Nenjellam modhi modhi Enil paainthidum kaadhalae Pesaatha vaasam polae Enil paainthidum kaadhalae Both : Nenjellam modhi modhi Male : Puyal kaatril kudai pol En vaazhvinai thalaikeezh Endrae maatinaai Female : Kudai kambil valaigindra Velaiyil nanaithaayae Thooralgalaai Male : Kaadhal eeram kaaya Aasai theeyaanaai Theeyin veppam aara Both : Mudhanindru marubadi Thodangugiraai Male : Mudivedhum illaamal Female : Thodarnthidu Male : Ilaipaara nillaamal Female : Paranthidu Male : Oru vaarthai sollaamal Female : Anaithidu Male : Vizhiyaal kolgindraai Female : Kanavidhuvaa Haa..aa..aaa…aaa… Female : Idhu thaan andru naan kanda kanavu Muzhudhaai indru meiyaagudhu Idhu thaan andru naan ketta ulagu Azhagaai ingu undaanadhu Female : Nagai yedhum vendaamae Pudhu selai vendaamae Ketti melam vendaamae Iru nenjam ondraaga Both : Nenjellam modhi modhi Enil paainthidum kaadhalae Pesaatha vaasam polae Enil paainthidum kaadhalae Both : Nenjellam modhi modhi Enil paainthidum kaadhalae Both : Nenjellam modhi modhi
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் சிவாங்கி இசை அமைப்பாளர் : ஷபீர் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி இருவர் : நெஞ்செல்லாம் மோதி மோதி எனில் பாய்ந்திடும் காதலே பேசாத வாசம் போலே எனில் பாய்ந்திடும் காதலே விசில் : …………………. ஆண் : இதன் முன்னே சிந்தாத மழையே இதயத்தில் ஏன் வீழ்கிறாய் பெண் : இதன் முன்னே நில்லாத நொடியே யுகம் ஒன்றாய் ஏன் நீள்கிறாய் ஆண் : உறவேதும் இல்லாமல் குறை ஏதும் சொல்லாமல் தனியாக வாழ்ந்தேனே பிறகுன்னை கண்டேனே பெண் : எந்தன் பூமி நீ என்று கடல் யாவும் நீ என்று உனை கண்டு கொண்டேனே எனில் ஊறி கொண்டேனே இருவர் : {நெஞ்செல்லாம் மோதி மோதி எனில் பாய்ந்திடும் காதலே பேசாத வாசம் போலே எனில் பாய்ந்திடும் காதலே} (2) இருவர் : நெஞ்செல்லாம் மோதி மோதி ஆண் : புயல் காற்றில் குடை போல் என் வாழ்வினை தலைகீழ் என்றே மாற்றினாய் பெண் : குடை கம்பி வளைகின்ற வேளையில் நனைத்தாயே தூறல்களாய் ஆண் : காதல் ஈரம் காய ஆசை தீயானாய் தீயின் வெப்பம் ஆற இருவர் : முதனின்று மறுபடி தொடங்குகிறாய் ஆண் : முடிவேதும் இல்லாமல் பெண் : தொடர்ந்திடு ஆண் : இளைப்பாற நில்லாமல் பெண் : பறந்திடு ஆண் : ஒரு வார்த்தை சொல்லாமல் பெண் : அணைத்திடு ஆண் : விழியாலே கொல்கின்றாய் பெண் : கனவிதுவா..ஹா..ஆஆ…. பெண் : இது தான் அன்று நான் கண்ட கனவு முழுதாய் இன்று மெய்யாகுது இது தான் அன்று நான் கேட்ட உலகு அழகாய் இங்கு உண்டானது பெண் : நகை ஏதும் வேண்டாமே புது சேலை வேண்டாமே கெட்டி மேளம் வேண்டாமே இரு நெஞ்சம் ஒன்றாக இருவர் : நெஞ்செல்லாம் மோதி மோதி எனில் பாய்ந்திடும் காதலே பேசாத வாசம் போலே எனில் பாய்ந்திடும் காதலே இருவர் : நெஞ்செல்லாம் மோதி மோதி எனில் பாய்ந்திடும் காதலே இருவர் : நெஞ்செல்லாம் மோதி மோதி