← Back

Thogai Ilamayil Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Thogai ilamayil aadi varugudhu Vaanil mazhai varumo Kodhai ival vizhi nooru kavidhaigal Naalum ezhudhidumo Thaen sindhum neram Naan paadum raagam Kaattrodu kalyaanam seiginradho Male : Thogai ilamayil aadi varugudhu Vaanil mazhai varumo Male : Kolam podum naanangal Kaanaadha jaalam Idhazhgalilae pournami velicham Kannil thullum thaalangal Aanandha melam Imai paravai siragugal asaikkum Male : Vizhighalilae kaadhal vizhaa Nadathugiraal saagundhalaa Annamum ivalidam nadai pazhaghum Ival nadai asaivinil sangeedham undaagum Male : Thogai ilamayil aadi varugudhu Vaanil mazhai varumo Thaen sindhum neram Naan paadum raagam Kaattrodu kalyaanam seiginradho Male : Bhoomi engum poondhottam Naam kaana vendum Pudhu thendralo pookkalil vasikkum Aagaaya megangal neeroottra vendum Andha mazhaiyil malargalum kulikkum Male : Aruvigalo raagam tharum Adhil nanaindhaal dhaagham varum Dhevadhai vizhiyilae amudha alai Kanavugal valarthidum kalloorum un paarvai Male : Thogai ilamayil aadi varugudhu Vaanil mazhai varumo Kodhai ival vizhi nooru kavidhaigal Naalum ezhudhidumo Thaen sindhum neram Naan paadum raagam Kaattrodu kalyaanam seiginradho
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம் காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ ஆண் : தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ ஆண் : கோலம் போடும் நாணங்கள் காணாத ஜாலம் இதழ்களிலே பெளர்ணமி வெளிச்சம் கண்ணில் துள்ளும் தாளங்கள் ஆனந்த மேளம் இமைப் பறவை சிறகுகள் அசைக்கும் ஆண் : விழிகளிலே காதல் விழா நடத்துகிறாள் சாகுந்தலா அன்னமும் இவளிடம் நடைபழகும் இவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும் ஆண் : தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம் காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ ஆண் : பூமியெங்கும் பூந்தோட்டம் நாம் காண வேண்டும் புதுத் தென்றலோ பூக்களில் வசிக்கும் ஆகாய மேகங்கள் நீரூற்ற வேண்டும் அந்த மழையில் மலர்களும் குளிக்கும் ஆண் : அருவிகளோ ராகந் தரும் அதில் நனைந்தால் தாகம் வரும் தேவதை விழியிலே அமுத அலை கனவுகள் வளர்த்திடும் கள்ளூறும் உன் பார்வை ஆண் : தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம் காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ