← Back

Ranga Rangaiah Song Lyrics

Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female : {Rangaa rangaiyaa Engae ponaalum Ragasiyam manasukku Sumai thaanae} (2) Female : Pollaadha kobaththai thallu Ingu ennodu yedhaenum sollu Pollaadha kobaththai thallu Ingu ennodu yedhaenum sollu Nalla poo pola ullathai kaattu Intha pen meedhu ennathai maatru Female : Rangaa rangaiyaa Engae ponaalum Ragasiyam manasukku Sumai thaanae Female : Aaaaa aaa aaaa…. Poiyaana kanakkezudhum Vanigar undu Pozudhellaam oor kedukkum Manidhar undu Thavaraaga panam serkkum Kayavar undu Sathiyamae thalai maraivaai Ponadhundu Female : Nalla manidhar aayiram solli Nyaayam nilaikkavillai Nalla manidhar aayiram solli Nyaayam nilaikkavillai Naalu doctor paartha pinnum Needhi pizhaikkavillai Female : Sorgathai kaangindra vayasu Idhu sonthangal kondaadum manasu Aahaa pakkathil nirkindra ilasu Un paarvaikku thavikkindra pudhusu Female : Ah rangaa rangaiyaa Engae ponaalum Ragasiyam manasukku Sumai thaanae Female : Aaaa aaaa aaa…….. Mai theettum kangalilae Mayakkam undu Malar soodum koonthalilae Manjam undu Kaiyodu sernthirukka Kanni undu Kaadhalilae namakkendror Kavidhai Undu Female : Paruva silaiyai pakkathil vaithu Ulagai ninaikkaadhae Paavam niraintha ulagathukkaaga Vedham padikkaadhae Female : Poongkaatru thalaattum iravu Intha poovaikku unnodu uravu Adi ammaadi ennenna kanavu Idhai ariyaamal yen intha ninaivu Female : Ah rangaa rangaiyaa Engae ponaalum Ragasiyam manasukku Sumai thaanae
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : {ரங்கா ரங்கையா எங்கே போனாலும் ரகசியம் மனசுக்கு சுமை தானே} (2) பெண் : பொல்லாத கோபத்தை தள்ளு இங்கு என்னோட ஏதேனும் சொல்லு பொல்லாத கோபத்தை தள்ளு இங்கு என்னோட ஏதேனும் சொல்லு நல்ல பூ போல உள்ளதை காட்டு இந்த பெண் மீது என்னத்தை மாற்று பெண் : ரங்கா ரங்கையா எங்கே போனாலும் ரகசியம் மனசுக்கு சுமை தானே பெண் : ஆஆஅ ஆஅ ஆஆ… பொய்யான கணக்கெழுதும் வணிகர் உண்டு பொழுதெல்லாம் ஊர் கெடுக்கும் மனிதர் உண்டு தவறாக பணம் சேர்க்கும் கயவர் உண்டு சத்தியமே தலை மறைவாய் போனதுண்டு பெண் : நல்ல மனிதர் ஆயிரம் சொல்லி நியாயம் நிலைக்கவில்லை நல்ல மனிதர் ஆயிரம் சொல்லி நியாயம் நிலைக்கவில்லை நாலு டாக்டர் பார்த்த பின்னும் நீதி பிழைக்கவில்லை பெண் : சொர்க்கத்தை காண்கின்ற வயசு இது சொந்தங்கள் கொண்டாடும் மனசு ஆஹா பக்கத்தில் நிற்கின்ற இளசு உன் பார்வைக்கு தவிக்கின்ற புதுசு பெண் : ஆ ரங்கா ரங்கையா எங்கே போனாலும் ரகசியம் மனசுக்கு சுமை தானே பெண் : ஆஆஅ ஆஆ ஆஅ….. மை தீட்டும் கண்களிலே மயக்கம் உண்டு மலர் சூடும் கூந்தலிலே மஞ்சம் உண்டு கையோடு சேர்ந்திருக்க கன்னி உண்டு காதலிலே நமக்கென்றோர் கவிதை உண்டு பெண் : பருவ சிலையை பக்கத்தில் வைத்து உலகை நினைக்காதே பாவம் நிறைந்த உலகத்துக்காக வேதம் படிக்காதே பெண் : பூங்காற்று தாலாட்டும் இரவு இந்த பூவைக்கு உன்னோடு உறவு அடி அம்மாடி என்னென்ன கனவு இதை அறியாமல் ஏன் இந்த நினைவு பெண் : ஆ ரங்கா ரங்கையா எங்கே போனாலும் ரகசியம் மனசுக்கு சுமை தானே