← Back

Annai Madiyil Male Song Lyrics

Singer : Malasiya Vasudevan Music by : Hamsalekha Male : Annai madiyil kann thirandhom Mannin madiyil kan maraindhom Annai madiyil kann thirandhom Mannin madiyil kan maraindhom Uyiril uyirgal jananam Jananam irundhal maranam Iyarkkai thaanada yen salanam Male : Annai madiyil kann thirandhom Mannin madiyil kan maraindhom Chorus : ……………………. Male : Pirandha thoppul kodi aruntha velaiyil Uravum arundhadha annaiyae Pirappum paalilae irappum paalilae Manadhu marakkuma unnaiyae Male : Paadhi thookathil kalaiya gnyabagam Marandhu ponadhae unadhu poo mugam Thedi thirigiren dhesam engum Male : Singu kuttiyai pettreduthaal Thanga kattiyai kandeduthaal Chorus : ……………………. Male : Vaanin mudivaiyum vaazhvin mudivaiyum Vagukka mudiyuma maganae Vaazhai vizhuvadhum kandru azhuvadhum Vaazhkai muraiyada maganae Male : Odum megamae unakku puriyuma Thaayin mugavari unakku theriyuma Uyirai pirindhumae jeevidhamaa Male : Singu kuttiyai pettreduthaal Thanga kattiyai kandeduthaal Singu kuttiyai pettreduthaal Thanga kattiyai kandeduthaal
பாடகர் : மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : ஹம்சலேகா ஆண் : அன்னை மடியில் கண் திறந்தோம் மண்ணின் மடியில் கண் மறைந்தோம் அன்னை மடியில் கண் திறந்தோம் மண்ணின் மடியில் கண் மறைந்தோம் உயிரில் உயிர்கள் ஜனனம் ஜனனம் இருந்தால் மரணம் இயற்கை தானடா ஏன் சலனம் ஆண் : அன்னை மடியில் கண் திறந்தோம் மண்ணின் மடியில் கண் மறைந்தோம் குழு : ……………………………… ஆண் : பிறந்த தொப்புள்கொடி அருந்த வேளையில் உறவும் அறுந்ததா அன்னையே பிறப்பும் பாலிலே இறப்பும் பாலிலே மனது மறக்குமா உன்னையே ஆண் : பாதி தூக்கத்தில் கலைய ஞாபகம் மறந்து போனதே உனது பூமுகம் தேடி திரிகிறேன் தேசமெங்கும் ஆண் : சிங்கக் குட்டியை பெற்றெடுத்தாள் தங்கக் கட்டியை கண்டெடுத்தாள் குழு : …………………………….. ஆண் : வானின் முடிவையும் வாழ்வின் முடிவையும் வகுக்க முடியுமா மகனே வாழை விழுவதும் கன்று அழுவதும் வாழ்க்கை முறையடா மகனே ஆண் : ஓடும் மேகமே உனக்கு புரியுமா தாயின் முகவரி உனக்கு தெரியுமா உயிரை பிரிந்துமே ஜீவிதமா….. ஆண் : சிங்கக் குட்டியை பெற்றெடுத்தாள் தங்கக் கட்டியை கண்டெடுத்தாள் சிங்கக் குட்டியை பெற்றெடுத்தாள் தங்கக் கட்டியை கண்டெடுத்தாள்