← Back

Pennullame Ponnanadhu Song Lyrics

Singers : P. Susheela and L. R. Eswari Music by : G. K .Venkatesh Female : Pennullame ponnanadhu Perumaikkendrae uruvaanadhu Adhu kondaadum nannaalidhu Pennullame ponnanadhu Female : Pennaiyae ulagin Kannena solli nalvazhi kaatuvom Thannaiyae nambum thairiyam kondu Penmaiyae pottruvom Female : Pennullame ponnanadhu Female : Panaththaalae ulagathai vilai pesadi Panpaadu enborkku bathil kooradi Panaththaalae ulagathai vilai pesadi Panpaadu enborkku bathil kooradi Naanam enbaar atcham enbaar namakkennadi Chorus : Adimai nilai andha kaalam Pudumai nilai indha kolam Adimai nilai andha kaalam Pudumai nilai indha kolam Female : Kaalam maarum velaiyilae kolam maarumadi Melai naattu uravinilae aaval meerudhadi Vaa pudhu ulagaiyae naan uruvakkuvom Ennaalum munneruvom Female : Paar ennum sollum ulagaiyae Suttri paaradi poongodi Bharathi sonna pennaiyum Konjam minjinaal ennadi Female : Pennullame …Chorus : Lalalalalalaaa Female : Ponnanadhu…Chorus : Lalalalalalaaa Female : Pennullame ponnanadhu Perumaikkendrae uruvaanadhu Chorus : Adhu kondaadum nannaalidhu Female : Verum kaiyil muzham poda koodadhadi Veli vesham vazhvukku udhavaadhadi Verum kaiyil muzham poda koodadhadi Veli vesham vazhvukku udhavaadhadi Nadai maaralaam idam maaralaam nilai maaralaama Chorus : Ullapadi ondrae ondru Unadhu vizhi engae sollu Ullapadi ondrae ondru Unadhu vizhi engae sollu Female : Aasai valarum manadhinilae thaevai adhigamadi Aadai kuraiyum pudhumaiyilae mogam koodumadi Vaa anbu vazhiyai naan uruvakkuvom Ennaalum munneruvom Female : Bharathi kanda pennidam nalla Panbaiyum paaradi Panivudan nenjil kanivudan vaazha Sonnadhai keladi Females : Pennullame ...Chorus : Lalalalalalaaa Females : Ponnanadhu…Chorus : Lalalalalalaaa Females : Pennullame ponnanadhu Perumaikkendrae uruvaanadhu Adhu kondaadum nannaalidhu
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பெண் : பெண்ணுள்ளமே பொன்னானது பெருமைக்கென்றே உருவானது அது கொண்டாடும் நன் நாளிது பெண்ணுள்ளமே பொன்னானது பெண் : பெண்ணையே உலகின் கண்ணென சொல்லி நல்வழி காட்டுவோம் தன்னையே நம்பு தைரியம் கொண்டு பெண்மையை போற்றுவோம்….. பெண் : பெண்ணுள்ளமே பொன்னானது பெண் : பணத்தாலே உலகத்தை விலை பேசடி பண்பாடு என்போர்க்கு பதில் கூறடி பணத்தாலே உலகத்தை விலை பேசடி பண்பாடு என்போர்க்கு பதில் கூறடி நாணமென்பார் அச்சமென்பார் நமக்கேனடி குழு : அடிமை நிலை அந்தக் காலம் புதுமை நிலை இந்தக் கோலம் அடிமை நிலை அந்தக் காலம் புதுமை நிலை இந்தக் கோலம் பெண் : காலம் மாறும் வேளையிலே கோலம் மாறுமடி மேலை நாட்டு உறவினிலே ஆவல் மீறுதடி வா புது உலகையே நாம் உருவாக்குவோம் எந்நாளும் முன்னேறுவோம் பெண் : பார் என்னும் சொல்லும் உலகையே சுற்றி பாரடி பூங்கொடி பாரதி சொன்ன பெண்ணையும் கொஞ்சம் மிஞ்சினால் என்னடி….. பெண் : பெண்ணுள்ளமே குழு : லாலாலலலலா பெண் : பொன்னானது குழு : லாலாலலலலா பெண் : பெண்ணுள்ளமே பொன்னானது பெருமைக்கென்றே உருவானது குழு : அது கொண்டாடும் நன் நாளிது பெண் : வெறும் கையில் முழம் போடக் கூடாதடி வெளி வேஷம் வாழ்வுக்கு உதவாதடி வெறும் கையில் முழம் போடக் கூடாதடி வெளி வேஷம் வாழ்வுக்கு உதவாதடி நடை மாறலாம் இடம் மாறலாம் நிலை மாறலாமா குழு : உள்ளபடி ஒன்றே ஒன்று உனது வழி எங்கே சொல்லு உள்ளபடி ஒன்றே ஒன்று உனது வழி எங்கே சொல்லு பெண் : ஆசை வளரும் மனதினிலே தேவை அதிகமடி ஆடை குறையும் புதுமையிலே மோகம் கூடுமடி வா அன்பு வழியை நாம் உருவாக்குவோம் எந்நாளும் முன்னேறுவோம் பெண் : பாரதி கண்ட பெண்ணிடம் நல்ல பண்பையும் பாரடி பணிவுடன் நெஞ்சில் கனிவுடன் வாழ சொன்னதை கேளடி…… பெண்கள் : பெண்ணுள்ளமே குழு : லாலாலலலலா பெண்கள் : பொன்னானது குழு : லாலாலலலலா பெண் : பெண்ணுள்ளமே பொன்னானது பெருமைக்கென்றே உருவானது அது கொண்டாடும் நன் நாளிது