← Back

Thaayin Madiyil Thalai Vaithirundhaal Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male : Ethanai selvangal vandhaalumae Ethanai inbangal thandhaalumae Athanaiyum oru thaayaagumaa Ammaa… ammaa… ammaa… Enakkadhu neeyaagumaa… Male : Thaayin madiyil thalai vaithirundhaal Thuyaram therivadhillai Thaayin madiyil thalai vaithirundhaal Thuyaram therivadhillai Thuyaram therivadhillai Thaayin vadivil dheivathai kandaal Vaeroru dheivamillai Vaeroru dheivamillai Male : Thaayin madiyil thalai vaithirundhaal Thuyaram therivadhillai Male : Pathu maadham porumai valarthae Boomiyai minjiduvaal Boomiyai minjiduvaal Vellai manadhai thottilaakki Vellai manadhai thottilaakki Pillaiyai konjiduvaal…aaa…aaa… Pillaiyai konjiduvaal Male : Thaayin madiyil thalai vaithirundhaal Thuyaram therivadhillai Male : Anbil malarum arpudhamellaam Annaiyin vilaiyaattu Alaiyum manadhai amaidhiyil vaippadhu Annaiyin thaalaattu Male : Ennai paartha annai mugathai Ezhai paarthadhillai Ennai paartha annai mugathai Ezhai paarthadhillai Kannae kannae kannae endru Konjiya vaarthai kaadhil kettadhillai Kaadhil kettadhillai… Kaadhil kettadhillai…
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : எத்தனை செல்வங்கள் வந்தாலுமே எத்தனை இன்பங்கள் தந்தாலுமே அத்தனையும் ஒரு தாயாகுமா அம்மா……அம்மா…….அம்மா…… எனக்கது நீயாகுமா…… ஆண் : தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை துயரம் தெரிவதில்லை தாயின் வடிவில் தெய்வத்தைக் கண்டால் வேறொரு தெய்வமில்லை வேறொரு தெய்வமில்லை ஆண் : தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை… ஆண் : பத்து மாதம் பொறுமை வளர்த்தே பூமியை மிஞ்சிடுவாள் பூமியை மிஞ்சிடுவாள் வெள்ளை மனதை தொட்டிலாக்கி வெள்ளை மனதை தொட்டிலாக்கி பிள்ளையைக் கொஞ்சிடுவாள்……ஆஅ…..ஆ….. பிள்ளையைக் கொஞ்சிடுவாள் ஆண் : தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை… ஆண் : அன்பில் மலரும் அற்புதமெல்லாம் அன்னையின் விளையாட்டு அலையும் மனதை அமைதியில் வைப்பது அன்னையின் தாலாட்டு ஆண் : என்னைப் பார்த்த அன்னை முகத்தை ஏழை பார்த்ததில்லை என்னைப் பார்த்த அன்னை முகத்தை ஏழை பார்த்ததில்லை கண்ணே கண்ணே கண்ணே என்று கொஞ்சிய வார்த்தை காதில் கேட்டதில்லை காதில் கேட்டதில்லை….. காதில் கேட்டதில்லை…….