← Back

Thalli Pogathey Song Lyrics

Singer : Sid Sriram Music by : A.R. Rahman Female : ………………………………………… Male : Yeno vaanilai maarudhae Mani thuli pogudhae Maarbin vegam koodudhae Manamo yetho solla vaarthai thedudhae Male : Kannellam neeyae thaan nirkindraai Vizhiyin mel naan kobam konden Imai moodidu endren Male : Nagarum nodigal kasaiyadi polae Muthugin melae vizhuvathinaalae Vari vari kavidhai Ezhudhum valigal ezhudha mozhigal enadhu Male : Kadal polae peridhaaga nee nindraai Siruvan naan siru alai matum dhaan Paarkiren paarkiren Eriyum theeyil ennai nee ootru Naan vandhu neeraadum neerootru Male : Oh oorellam kanmoodi thoongum Osaigal illaadha iravae Oh naan matum thoonkamal Yengi un polae kaaigindren nilavae Male : Kalaabam polaadum kanavil vaazhgindrenae Kai neeti unnai theendavae paarthen Yen adhil thorthen yen mudhal mutham Thara thaamadham aaguthu Thaamarai veguthu Female : …………………………………… Male : { Thalli pogadhae enaiyum Thalli poga solladhae Iruvar idhazhum malar enum multhaanae } (2) Male : Dhegam thadai illai ena naanum Oru vaarthai solgindren Aanaal athu poi dhaan Yena neeyum arivaai engindren Aruginil vaa Female : …………………………………………… Male : Kanavilae therinthaai Vizhithadhum olinthaai Kanavinil dhinam dhinam mazhai Thuliyaai pozhinthaai Male : Thalli Pogadhae …………. Male : Kangalil yekam kaadhalin mayakam Aanaal paartha nimidam Oru vidhamaana thayakam Male : Nodi nodiyaai neram kuraiya En kaadhal aayul karaiya Yeno yeno maarbil vegam kooda Male : Vidhiyin sadhi vilaiyaadudhae { Enai vittu piriyadhanbae } (2) Female : ………………………………………………. Male : Yeno yeno yeno yeno yeno yeno Female : Anbae
பாடகா் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான் பெண் : ………………………………… ஆண் : ஏனோ வானிலை மாறுதே மணித்துளி போகுதே மாா்பின் வேகம் கூடுதே மனமோ ஏதோ சொல்ல வாா்த்தை தேடுதே ஆண் : கண்ணெல்லாம் நீயேதான் நிற்கின்றாய் விழியின்மேல் நான் கோபம் கொண்டேன் இமை மூடிடு என்றேன் ஆண் : நகரும் நொடிகள் கசையடிப் போலே முதுகின் மேலே விழுவதினாலே வாி வாிக் கவிதை எழுதும் வலிகள் எழுதா மொழிகள் எனது ஆண் : கடல் போல பொிதாக நீ நின்றாய் சிறுவன் நான் சிறு அலை மட்டும் தான் பாா்க்கிறேன் பாா்க்கிறேன் எாியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று நான் வந்து நீராடும் நீரூற்று ஆண் : ஓ.. ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும் ஓசைகள் இல்லாத இரவே ஓ.. நான் மட்டும் தூங்காமல் ஏங்கி உன்போல காய்கின்றேன் நிலவே ஆண் : கலாபம் போலாடும் கனவில் வாழ்கின்றனே கை நீட்டி உன்னைத் தீண்டவே பாா்த்தேன் ஆண் : ஏன் அதில் தோற்றேன் ஏன் முதல் முத்தம் தர தாமதம் ஆகுது தாமரை வேகுது பெண் : ………………………………… ஆண் : { தள்ளிப் போகாதே எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே இருவர் இதழும் மலா் எனும் முள்தானே } (2) ஆண் : தேகம் தடை இல்லை என நானும் ஒரு வாா்த்தை சொல்கின்றேன் ஆனால் அது பொய் தான் என நீயும் அறிவாய் என்கின்றேன் அருகினில் வா பெண் : ………………………………… ஆண் : கனவிலே தொிந்தாய் விழித்ததும் ஒளிந்தாய் கனவினில் தினம் தினம் மழைத்துளியாய்ப் பொழிந்தாய் ஆண் : தள்ளிப் போகாதே……… ஆண் : கண்களில் ஏக்கம் காதலின் மயக்கம் ஆனால் பாா்த்த நிமிடம் ஒரு விதமானத் தயக்கம் ஆண் : நொடி நொடியாய் நேரம் குறைய என் காதல் ஆயுள் கறைய ஏனோ ஏனோ மாா்பில் வேகம் கூட ஆண் : விதியின் சதி விளையாடுதே { எனை விட்டுப் பிாியாதன்பே } (2) பெண் : ………………………………… ஆண் : ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ பெண் : அன்பே