← Back

Nilavu Oru Pennagi Song Lyrics

Singer : T.M. Soundararajan Music by : M.S. Viswanathan Male : { Nilavu oru pennagi Ulavugindra azhago Neeralaigal idam maari Neenthugindra kuzhalo } (2) Neenthugindra kuzhalo Male : { Maathulaiyin poo polae Malarugindra idhazho } (2) Maan inamum meen inamum Mayangugindra vizhiyo Male : Nilavu oru pennagi Ulavugindra azhago Neeralaigal idam maari { Neenthugindra kuzhalo } (2) Male : { Puruvam oru villaga Paarvai oru kanaiyaaga } (2) Paruvam oru thalamaaga Por thoduka piranthavalo Male : { Kurunagaiyin vannathil Kuzhi vizhuntha kannathil } (2) Thaen suvaiyai thaan kuzhaithu Kodupathellam ival thaano Male : Nilavu oru pennagi Ulavugindra azhago Neeralaigal idam maari Neenthugindra kuzhalo Male : Pavalamena viral Nagamum pasum thalir Pol valaikaramum Male : Thaen kanigal iru Puramum thaangi Varum poonkodiyo Male : { Aalkadalin sangaaga Neelkazhuthu amainthavalo } (2) Yazhisaiyin oliyaaga vaaimozhi Thaan malarnthavalo Male : Nilavu oru pennagi Ulavugindra azhago Neeralaigal idam maari Neenthugindra kuzhalo Male : Senthazhalin oli Eduthu santhanathin Kulir koduthu Male : Ponpagatil vaarthu Vaitha pennudalai ennavenben Male : { Madalvaazhai thudai Iruka macham ondru adhil iruka } (2) Padaithavanin thiramai ellam Muzhumai petra azhagi enben Male : Nilavu oru pennagi Ulavugindra azhago Neeralaigal idam maari { Neenthugindra kuzhalo } (2)
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : { நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ } (2) நீந்துகின்ற குழலோ ஆண் : { மாதுளையின் பூ போலே மலருகின்ற இதழோ } (2) மான் இனமும் மீன் இனமும் மயங்குகின்ற விழியோ ஆண் : நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ நீந்துகின்ற குழலோ ஆண் : { புருவம் ஒரு வில்லாக பார்வை ஒரு கணையாக } (2) பருவம் ஒரு தளமாக போர் தொடுக்க பிறந்தவளோ ஆண் : { குறுநகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில் } (2) தேன் சுவையை தான் குழைத்து கொடுப்பதெல்லாம் இவள் தானோ ஆண் : நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ ஆண் : பவளமென விரல் நகமும் பசும் தளிர் போல் வளைகரமும் ஆண் : தேன் கனிகள் இரு புறமும் தாங்கி வரும் பூங்கொடியோ ஆண் : { ஆழ்கடலின் சங்காக நீள்கழுத்து அமைந்தவளோ } (2) யாழிசையின் ஒலியாக வாய்மொழி தான் மலர்ந்தவளோ ஆண் : நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ ஆண் : செந்தழலின் ஒளி எடுத்து சந்தனத்தின் குளிர் கொடுத்து ஆண் : பொன்பகட்டில் வார்த்துவைத்த பெண்ணுடலை என்னவென்பேன் ஆண் : { மடல்வாழை தொடை இருக்க மச்சம் ஒன்று அதில் இருக்க } (2) படைத்தவனின் திறமை எல்லாம் முழுமை பெற்ற அழகி என்பேன் ஆண் : நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ நீந்துகின்ற குழலோ