← Back

Nee Thayumillai Song Lyrics

Singer : P. Leela Music by : T. Chalapathi Rao Lyrics by : Kannadasan Humming : .……………. Female : Paal kodutha thanangal sollum Paarthiruntha kangal sollum Sollukku porul ariyaar Sollivittu odi vittar Sollivittu odi vittar Female : Nee thaaiyum illaiyaam Avan saeiyum illaiyaam Nee thaaiyum illaiyaam Avan saeiyum illaiyaam Sattathilae Avar sattathilae Ungal sondham kaanvillaiyaam Nee thaaiyum illaiyaam Avan saeiyum illaiyaam Female : Pasuvai kooda annai endru Paadam solgiraar Than paal koduthu valarthaval Thaaiyillai engiraar Pasuvai kooda annai endru Paadam solgiraar Than paal koduthu valarthaval Thaaiyillai engiraar Female : Pillai kandru pola kadharum podhu Thookki selgiraar Ini karpanaiyil maganai kandu Pesa solgiraar Nee thaaiyum illaiyaam Avan saeiyum illaiyaam Female : Nee poovilandhu pottilandhu Pona naalilae Unai porumai kolla sonna Pillai karuvil irundhaan Nee poovilandhu pottilandhu Pona naalilae Unai porumai kolla sonna Pillai karuvil irundhaan Female : Nee kann thirandhu paartha podhu Kaiyil irundhaan Andru kandathellam kanavai pola Odi marainthaan Nee thaaiyum illaiyaam Avan saeiyum illaiyaam Female : Anbariyaa manidhar unnai Aadavum vaithaar Nee aadum bothu medai yeri Kaalai murithaar Anbariyaa manidhar unnai Aadavum vaithaar Nee aadum bothu medai yeri Kaalai murithaar Female : Nee kannizhandha velaiyilae Kangal koduthaar Nee kaanum varai paarthirunthu Kannai parithaar Nee thaaiyum illaiyaam Avan saeiyum illaiyaam
பாடகி : பி. லீலா இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் முனங்கல் : …………….. பெண் : பால் கொடுத்த தனங்கள் சொல்லும் பார்த்திருந்த கண்கள் சொல்லும் சொல்லுக்குப் பொருளறியார் சொல்லிவிட்டு ஓடி விட்டார் சொல்லிவிட்டு ஓடி விட்டார் பெண் : நீ தாயுமில்லையாம் அவன் சேயுமில்லையாம் நீ தாயுமில்லையாம் அவன் சேயுமில்லையாம் சட்டத்திலே அவர் சட்டத்திலே உங்கள் சொந்தம் காணவில்லையாம்.. நீ தாயுமில்லையாம் அவன் சேயுமில்லையாம் பெண் : பசுவைக் கூட அன்னையென்று பாடம் சொல்கிறார் தன் பால் கொடுத்து வளர்த்தவள் தாயில்லை என்கிறார் பசுவைக் கூட அன்னையென்று பாடம் சொல்கிறார் தன் பால் கொடுத்து வளர்த்தவள் தாயில்லை என்கிறார் பெண் : பிள்ளை கன்று போல கதறும்போது தூக்கிச் செல்கிறார் இனி கற்பனையில் மகனைக் கண்டு பேசச் சொல்கிறார்…….. நீ தாயுமில்லையாம் அவன் சேயுமில்லையாம் பெண் : நீ பூவிழந்து பொட்டிழந்து போன நாளிலே உனை பொறுமை கொள்ள சொன்ன பிள்ளை கருவிலிருந்தான்.. நீ பூவிழந்து பொட்டிழந்து போன நாளிலே உனை பொறுமை கொள்ள சொன்ன பிள்ளை கருவிலிருந்தான்.. பெண் : நீ கண் திறந்து பார்த்தபோது கையில் இருந்தான் அன்று கண்டதெல்லாம் கனவு போல ஓடி மறைந்தான்……. நீ தாயுமில்லையாம் அவன் சேயுமில்லையாம் பெண் : அன்பறியா மனிதர் உன்னை ஆடவும் வைத்தார் நீ ஆடும்போது மேடை ஏறி காலை முறித்தார் அன்பறியா மனிதர் உன்னை ஆடவும் வைத்தார் நீ ஆடும்போது மேடை ஏறி காலை முறித்தார் பெண் : நீ கண்ணிழந்த வேளையிலே கண்கள் கொடுத்தார் நீ காணும் வரை பார்த்திருந்து கண்ணைப் பறித்தார்…,.. நீ தாயுமில்லையாம் அவன் சேயுமில்லையாம்