← Back

Adaiyalam Yeralam Song Lyrics

Singers : Anthony Daasan and Vagu Mazan Music by : Vagu Mazan Male : Adaiyaalam yeraalam Aalenga?…perenga? Nenapirukku nenjamellam Neeyenga?…naaenga? Male : Kumbhi eriyuthadi Kondhalikkum emmanasil Thumbhi parakkudhadi Thonudhadi pazhaiyakadha Female : Adaiyaalam yeraalam Aalenga?…perenga? Nenapirukku nenjamellam Neeyenga?…naaenga? Female : Kumbhi eriyuthaiya Kondhalikkum emmanasil Thumbhi parakkudhaiyaa Thonudhaiyaa pazhaiyakadha Male : Ohhh minnal vettum raathiriyil Sannal pakkam nee azhaikka Anneram paarthu Anjaaru naai kolaikka Male : Verichodi poirundha Veedhiyilae naan vizhundhu Therichodi ponadhukku Theruvilakku adaiyaalam Female : Oh sottangallu onnu Enthoda pakkam thavari vizha Kalledukkum saakkula Nee kallathanam panna Female : Aadi vizhundhadhukkum Aazha vidu saamiyinnu Oodi olinchadhukkum Oodai karai adaiyaalam Male : Adaiyaalam yeraalam Aalenga?…perenga? Nenapirukku nenjamellam Neeyenga?…naaenga? Male : Kumbhi eriyuthadi Kondhalikkum emmanasil Thumbhi parakkudhadi Thonudhadi pazhaiyakadha Female : Seelakatta theriyaadha Sirimiyinnu paarkkaama Velaketta velaiyila Verikondu nee anaikka Female : Maamaannu merandathukum Manamaalai kettadhukku Aamaannu sonnadhukkum Amman kovil adaiyaalam Male : Ohh oorukkae theriyaama Yaarukko pendaagi Kudhirai vandi yeri Kodikaal kadakaiyilae Male : Madi vizhundha kanneeru Mazhaiyaagi ponathukku Idi vizhundha aaazhamaram Innaikkum adaiyaalam Female : Yee….yeee Adaiyaalam yeraalam Aalenga?…perenga? Nenapirukku nenjamellam Neeyenga?…naaenga? Male : Kumbhi eriyuthadi Kondhalikkum emmanasil Thumbhi parakkudhadi Thonudhadi pazhaiyakadha
பாடகர்கள் : அந்தோணி தாசன் மற்றும் வகு மலன் இசை அமைப்பாளர் : வகு மலன் ஆண் : அடையாளம் ஏராளம் ஆளெங்க? பேரெங்க? நெனப்பிருக்கு நெஞ்செல்லாம் நீயெங்க? நானெங்க? ஆண் : கும்பி எரியுதடி கொந்தளிக்கும் எம்மனசில் தும்பி பறக்குதடி தோணுதடி பழையகதை பெண் : அடையாளம் ஏராளம் ஆளெங்க? பேரெங்க? நெனப்பிருக்கு நெஞ்செல்லாம் நீயெங்க? நானெங்க? பெண் : கும்பி எரியுதய்யா கொந்தளிக்கும் எம்மனசில் தும்பி பறக்குதய்யா தோணுதய்யா பழையகதை ஆண் : ஓ மின்னல் வெட்டும் ராத்திரியில் சன்னல் பக்கம் நீஅழைக்க அந்நேரம் பாத்து அஞ்சாறு நாய் கொலைக்க வெறிச்சோடிப் போயிருந்த வீதியில நான்விழுந்து தெறிச்சோடிப் போனதுக்குத் தெருவிளக்கு அடையாளம் பெண் : ஓ சொட்டாங்கல்லு ஒண்ணு எந் தொடைப்பக்கம் தவறிவிழ கல்லெடுக்கும் சாக்குல நீ கள்ளத்தனம் பண்ண ஆடி விழுந்ததுக்கும் ஆளவிடு சாமியின்னு ஓடி ஒளிஞ்சதுக்கும் ஓடைக்கரை அடையாளம் ஆண் : அடையாளம் ஏராளம் ஆளெங்க? பேரெங்க? நெனப்பிருக்கு நெஞ்செல்லாம் நீயெங்க? நானெங்க? ஆண் : கும்பி எரியுதடி கொந்தளிக்கும் எம்மனசில் தும்பி பறக்குதடி தோணுதடி பழையகதை பெண் : சீலகட்டத் தெரியாத சிறுமியின்னு பாக்காம வேளகெட்ட வேளையில வெறிகொண்டு நீயணைக்க மாமான்னு மிரண்டதுக்கும் மணமாலை கேட்டதுக்கு ஆமான்னு சொன்னதுக்கும் அம்மன்கோயில் அடையாளம் ஆண் : ஓ ஊருக்கே தெரியாம யாருக்கோ பெண்டாகிக் குதிரைவண்டி ஏறிக் கொடிக்கால் கடக்கையில மடிவிழுந்த கண்ணீரு மழையாகிப் போனதுக்கு இடிவிழுந்த ஆலமரம் இன்னைக்கும் அடையாளம் பெண் : ஏ ஏ ஏ …அடையாளம் ஏராளம் ஆளெங்க? பேரெங்க? நெனப்பிருக்கு நெஞ்செல்லாம் நீயெங்க? நானெங்க? ஆண் : கும்பி எரியுதடி கொந்தளிக்கும் எம்மனசில் தும்பி பறக்குதடி தோணுதடி பழையகதை