← Back

Kalyana Kovilin Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Male : Ohoooooo ho… la la la la la la…. La la la la la la…. lalalalalala…. Female : Aaa…Aaa Male : Kalyana kovilin deiveega kalasam Kalyana kovilin deiveega kalasam Kangalil theriyudhu thelivaaga Vaanampattu megam kaadhal thattil eari Aadattum odattum aanandham paadattum kanne Male : Kalyan kovilin deiveega kalasam Female : Vaazhaiyum kamugum thorana pandhal Manavarai manasangu mani dheepangal Male : Thozhiyar gaeli thogaiyar vaazhthu Sorgathil undaagum suga raagangal Female : Intha kanavaanadhu Male : Endru nanavaagumo Female : Intha kanavaanadhu Male : Endru nanavaagumo Female : Adhai dheivangal koorattum Sonthangal serattum kannaa Female : Kalyana kovilin deiveega kalasam Kangalil theriyudhu thelivaaga Vaanampattu megam kaadhal thattil eari Aadattum odattum aanandham paadattum kanna Female : Kalyana kovilin deiveega kalasam Male : Sandhanam panneerin aruvi Tharaiyil nadakkum manam paravi Female : Mandhiram vaethangal muzhangi Mayakkum kodukkum manam thazhuvi Male : Mangalam neendhum kunguma chaandhu Maligai malarmaalai pen paadhiyum Female : Kaigalil kaappu kaalgalil velli Kanivuru thalaippaagai aan paadhiyum Male : Inba mananaal endro Female : Antha thirunaal indro Male : Inba mananaal endro Female : Antha thirunaal indro Male : Adhai dheivangal koorattum Sonthangal serattum kannae Female : Kalyana kovilin deiveega kalasam Male : Kangalil theriyudhu thelivaaga Female : Vaanampattu megam kaadhal thattil eari Male : Aadattum odattum aanandham paadattum kanne Both : Kalyana kovilin deiveega kalasam Haaaaa…..aaaaaaa…..aaaaa….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஓஹோ ஹோ …லாலலாலாலலா….. .லாலலாலாலலா…..லாலாலாலாலா பெண் : ஆ….ஆ… ஆண் : கல்யாண கோவிலின் தெய்வீக கலசம் கல்யாண கோவிலின் தெய்வீக கலசம் கண்களில் தெரியுது தெளிவாக வானப்பட்டு மேகம் காதல் தட்டில் ஏறி ஆடட்டும் ஓடட்டும் ஆனந்தம் பாடட்டும் கண்ணே ஆண் : கல்யாண கோவிலின் தெய்வீக கலசம் பெண் : வாழையும் கமுகும் தோரண பந்தல் மணவறை மணிச்சங்கு மணி தீபங்கள் ஆண் : தோழியர் கேலி தோகையர் வாழ்த்து சொர்க்கத்தில் உண்டாகும் சுக ராகங்கள் பெண் : இந்த கனவானது ஆண் : என்று நனவாகுமோ பெண் : இந்த கனவானது ஆண் : என்று நனவாகுமோ பெண் : அதை தெய்வங்கள் கூறட்டும் சொந்தங்கள் சேரட்டும் கண்ணா பெண் : கல்யாண கோவிலின் தெய்வீக கலசம் கண்களில் தெரியுது தெளிவாக வானப்பட்டு மேகம் காதல் தட்டில் ஏறி ஆடட்டும் ஓடட்டும் ஆனந்தம் பாடட்டும் கண்ணா பெண் : கல்யாண கோவிலின் தெய்வீக கலசம் ஆண் : சந்தானம் பன்னீரின் அருவி தரையில் நடக்கும் மணம் பரவி பெண் : மந்திரம் வேதங்கள் முழங்கி மயக்கும் கொடுக்கும் மனம் தழுவி ஆண் : மங்கலம் நீந்தும் குங்கும சாந்து மல்லிகை மலர்மாலை பெண் பாதியும் பெண் : கைகளில் காப்பு கால்களில் வெள்ளி கனிவுறு தலைப்பாகை ஆண் பாதியும் ஆண் : இன்ப மணநாள் என்றோ பெண் : அந்த திருநாள் இன்றோ ஆண் : இன்ப மணநாள் என்றோ பெண் : அந்த திருநாள் இன்றோ ஆண் : அதை தெய்வங்கள் கூறட்டும் சொந்தங்கள் சேரட்டும் கண்ணா பெண் : கல்யாண கோவிலின் தெய்வீக கலசம் ஆண் : கண்களில் தெரியுது தெளிவாக பெண் : வானப்பட்டு மேகம் காதல் தட்டில் ஏறி ஆண் : ஆடட்டும் ஓடட்டும் ஆனந்தம் பாடட்டும் கண்ணே இருவரும் : கல்யாண கோவிலின் தெய்வீக கலசம் ஆஆஆ…ஆஆஆஆ……ஆஆஆ….