← Back

Enna Dhavam Seidhaen Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Srikanth Deva Male : Enna thavam seidhen Ennaippeththa maganae Kallukkullae eeram Kaanacheidha maganae Chorus : Haa..aaa haa..haaa aaa haa..(4) Male : Enna thavam seidhen Ennaippeththa maganae Kallukkullae eeram Kaanacheidha maganae Thaththivandha pillai nee….. eee…eee… Thaththivandha pillai nee….. Petra thandhai naanae Thandhaiyaana pinbu thaan Meendum pillayaanen Male : Enna thavam seidhen Ennaippeththa maganae Kallukkullae eeram Kaanacheidha maganae Chorus : ………………………… Male : ………………………….. Male : Buththikkul vanmurai Valarthirundhen Raththathil velaanmai Nadathivandhen Vaalodu velgal rendum Pidiththa kaiyil Vannaththu poochiyai pidiththukkonden Male : Paasathinaalae paaviyin vaazhvil Iththanai rusigalaa Naaththiganaaga vaazhndhavan arugae Iththanai kadavulaa Moovar mattum aalgira dhesam Naangal vaazhvadhu Paasam ondrae dhesiya geedham Endrae aanadhu Male : En viral naduvae idaiveli edharkku Un viral korththu uravaadathaan Thuyarangal marandhu vilaiyaadathaan Chorus : ……………………………. Male : Sonthangal poi endru Ninaiththirundhen Sorkkathin nagal endru Therindhukkonden..aen…. Bandhangal baaramendru Veruththirundhen … Baarangal parisendru purindhukkonden Male : Mutrum thurandhaal Motcham enbadhu Munivargal sonnadhu Pattrum anbum pagirvadhu thaanae Motcham enbadhu Male : Aanavamellaam anbil karaindhaal Aanandha vellamae Aayiram aandugal boomiyil vaazhum Maathirai vendumae Male : Aaradi kuraindhu arai adiyaagi Aanmagam madiyil maganaanen Aazhkadal migundha malaiyaanen Male : Enna thavam seidhen Ennaippeththa maganae Kallukkullae eeram Kaanacheidha maganae Thaththivandha pillai nee….. eee…eee… Thaththivandha pillai nee….. Petra thandhai naanae Thandhaiyaana pinbu thaan Meendum pillayaanen Chorus : Haa..aaa haa..haaa aaa haa..(4) Haa…aaa.haa…aaa…haaa….
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா ஆண் : என்ன தவம் செய்தேன் என்ன பெத்த மகனே கல்லுக்குள்ளே ஈரம் காணச் செய்த மகனே குழு : ஹா….ஆ….ஹா….ஹா….ஆ…ஹா….(4) ஆண் : என்ன தவம் செய்தேன் என்ன பெத்த மகனே கல்லுக்குள்ளே ஈரம் காணச் செய்த மகனே தத்தி வந்த பிள்ளை நீ…..ஈ…,ஈ….. தத்தி வந்த பிள்ளை நீ…… பெற்ற தந்தை நானே தந்தையான பின்புதான் மீண்டும் பிள்ளை ஆனேன் ஆண் : என்ன தவம் செய்தேன் என்ன பெத்த மகனே கல்லுக்குள்ளே ஈரம் காணச் செய்த மகனே குழு : ……………………………. ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆண் : புத்திக்குள் வன்முறை வளர்த்திருந்தேன் ரத்தத்தில் வேளாண்மை நடத்தி வந்தேன் வாளோடு வேல்கள் இரண்டும் பிடித்த கையில் வண்ணத்து பூச்சியை பிடித்து கொண்டேன் ஆண் : பாசத்தினாலே பாவியின் வாழ்வில் இத்தனை ருசிகளா நாத்திகனாக வாழ்ந்தவன் அருகே இத்தனை கடவுளா மூவர் மட்டும் ஆள்கிற தேசம் நாங்கள் வாழ்வது பாசம் ஒன்றே தேசியகீதம் என்றே ஆனது ஆண் : என் விரல் நடுவே இடைவெளி எதற்கு உன் விரல் கோர்த்து உறவாடத்தான் துயரங்கள் மறந்து விளையாடத்தான் குழு : ………………………… ஆண் : சொந்தங்கள் பொய் என்று நினைத்திருந்தேன் சொர்க்கத்தின் நகல் என்று தெரிந்து கொண்டேன்…ஏன்….. பந்தங்கள் பாரமென்று வெறுத்திருந்தேன் பாரங்கள் பரிசென்று புரிந்து கொண்டேன் ஆண் : முற்றும் துறந்தால் மோட்சம் என்பது முனிவர்கள் சொன்னது பற்றும் அன்பும் பகிர்வதுதானே மோட்சம் என்பது ஆண் : ஆணவம் எல்லாம் அன்பில் கரைந்தால் ஆனந்த வெள்ளமே ஆயிரம் ஆண்டுகள் பூமியில் வாழும் மாத்திரை வேண்டுமே ஆண் : ஆறடி குறைந்து அரையடி ஆகி ஆண்மகன் மடியில் மகனானேன் ஆழ்கடல் மிகுந்த மழையானேன் ஆண் : என்ன தவம் செய்தேன் என்ன பெத்த மகனே கல்லுக்குள்ளே ஈரம் காணச் செய்த மகனே தத்தி வந்த பிள்ளை நீ…..ஈ…ஈ….. தத்தி வந்த பிள்ளை நீ…… பெற்ற தந்தை நானே தந்தையான பின்புதான் மீண்டும் பிள்ளை ஆனேன் குழு : ஹா….ஆ….ஹா….ஹா….ஆ…ஹா….(4) ஹா….ஆ….ஹா….ஹா….ஆ…ஹா….