← Back

Akkaraiyil Avanirukka Song Lyrics

Singer : P. Susheela Music by : R. Govarthanam Lyrics by : Kannadasan Female : Akkaraiyil avanirukka Ikkaraiyil naanirukka Akkaraiyillaadhathenna kadal alaiyae Andru sendruvitta enn thalaivan varavillayae Female : Akkaraiyil avanirukka Ikkaraiyil naanirukka Akkaraiyillaadhathenna kadal alaiyae Andru sendruvitta enn thalaivan varavillayae Female : Katti oru mutthamittu Karpanaiyil kavi padithu Katti oru mutthamittu Karpanaiyil kavi padithu Thottanaithu kaadhalukku kadal alaiyae En tholirendum vaadudhadi kadal alaiyae… Female : Kaiyile valayal illai Kannirenddil thookamillai Kattiulla aadaigalum kadal alaiyae En sittridaiyil thangavillai kadal laiyae Female : Akkaraiyil avanirukka Ikkaraiyil naanirukka Akkaraiyillaadhathenna kadal alaiyae Andru sendruvitta enn thalaivan varavillayae Female : Porsilaiyin nenjinilae Poothirukkum malaraiyellaam Porsilaiyin nenjinilae Poothirukkum malaraiyellaam Karsilaikku saathuvaenoh kadal alaiyae En kanniraindha kaadhalanthaan varavillayae Female : Meenaaga pirandhirundhaal Vaendiyae thavamiruppaen Naanaaga poaiyiruppaen kadal alaiyae Naan maanaaga pirandhu vittaen kadal alaiyae Female : Akkaraiyil avanirukka Ikkaraiyil naanirukka Akkaraiyillaadhathenna kadal alaiyae Andru sendruvitta enn thalaivan varavillayae
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஆர். கோவர்த்தனம் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : அக்கரையில் அவனிருக்க இக்கரையில் நானிருக்க அக்கறையில்லாததென்ன கடல் அலையே அன்று சென்று விட்ட என் தலைவன் வரவில்லையே.. பெண் : அக்கரையில் அவனிருக்க இக்கரையில் நானிருக்க அக்கறையில்லாததென்ன கடல் அலையே அன்று சென்று விட்ட என் தலைவன் வரவில்லையே.. பெண் : கட்டி ஒரு முத்தமிட்டு கற்பனையில் கவி படித்து கட்டி ஒரு முத்தமிட்டு கற்பனையில் கவி படித்து தொட்டணைத்துக் காதலுக்கு கடல் அலையே என் தோளிரண்டும் வாடுதடி கடல் அலையே….. பெண் : கையிலே வளையலில்லை கண்ணிரண்டில் தூக்கமில்லை கட்டியுள்ள ஆடைகளும் கடல் அலையே. என் சிற்றிடையில் தங்கவில்லை கடல் அலையே.. பெண் : அக்கரையில் அவனிருக்க இக்கரையில் நானிருக்க அக்கறையில்லாததென்ன கடல் அலையே அன்று சென்று விட்ட என் தலைவன் வரவில்லையே.. பெண் : பொற்சிலையின் நெஞ்சினிலே பூத்திருக்கும் மலரையெல்லாம் பொற்சிலையின் நெஞ்சினிலே பூத்திருக்கும் மலரையெல்லாம் கற்சிலைக்குச் சாத்துவேனோ கடல் அலையே என் கண்ணிறைந்த காதலன்தான் வரவில்லையே பெண் : மீனாகப் பிறந்திருந்தால் வேண்டியே தவமிருப்பேன் நானாகப் போயிருப்பேன் கடல் அலையே நான் மானாகப் பிறந்து விட்டேன் கடல் அலையே…. பெண் : அக்கரையில் அவனிருக்க இக்கரையில் நானிருக்க அக்கறையில்லாததென்ன கடல் அலையே அன்று சென்று விட்ட என் தலைவன் வரவில்லையே..