← Back

Mullai Poovena Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female : Mullai poovena naam pettra pillai Muththu maanikkam eedondrum illai Mullai poovena naam pettra pillai Muththu maanikkam eedondrum illai Idhu yaarendru nee sollu kannaa Gandhiyaa bhuththanaa kannanthanaa….. Gandhiyaa bhuththanaa kannanthanaa….. Male : Ini thaalaattu nee paadumpothu Ivan veeraathi veranena paadu Ini thaalaattu nee paadumpothu Ivan veeraathi veranena paadu Idhu naadengum per sollum thangam Ramana bheemana karnanthaanaa….. Ramana bheemana karnanthaanaa….. Male : Ini thaalaattu nee paadumpothu Ivan veeraathi veranena paadu Male : Nallorgal ellorkkum pollaamai vedham Naalthorum solli tharuvaan Nallorgal ellorkkum pollaamai vedham Naalthorum solli tharuvaan Ingu kallaarkkum kattraarkkum bhagavaanin geedhai Kaiyaalae alli tharuvaan Male : Ivan rajangam kondaada poraadum Kannanin vishvaroobam verum Vedhaanntham siththaantham pesaatha En pillai karma veeram Ramana bheemana karnanthaanaa….. Ramana bheemana karnanthaanaa….. Male : Melaana kolgaikku poraadi vaazhvaan Veeraththai naadu vanangum Ivan vilaiyaadum puli pola azhakaga nadappaan Vaazh eendru vaan muzhangum Female : Konjam yosiththu sollungal Aasaiku orr pillai muththu polae Ivan aadattum paadatum aanaalum Kaanattum nalla naalae Gandhiyaa bhuththanaa kannanthanaa….. Gandhiyaa bhuththanaa kannanthanaa….. Female : Mullai poovena naam petrapillai Muththu maanikkam eedondrum illai Male : Idhu naadengum per sollum thangam Ramana bheemana karnanthaanaa….. Female : Gandhiyaa bhuththanaa kannanthanaa…..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : முல்லை பூவென நாம் பெற்ற பிள்ளை முத்து மாணிக்கம் ஈடொன்றும் இல்லை முல்லை பூவென நாம் பெற்ற பிள்ளை முத்து மாணிக்கம் ஈடொன்றும் இல்லை இது யாரென்று நீ சொல்லு கண்ணா காந்தியா புத்தனா கண்ணன்தானா….. காந்தியா புத்தனா கண்ணன்தானா….. ஆண் : இனி தாலாட்டு நீ பாடும்போது இவன் வீராதி வீரனென பாடு இனி தாலாட்டு நீ பாடும்போது இவன் வீராதி வீரனென பாடு இது நாடெங்கும் பேர் சொல்லும் தங்கம் ராமனா பீமனா கர்ணன்தானா……. ராமனா பீமனா கர்ணன்தானா……. ஆண் : இனி தாலாட்டு நீ பாடும்போது இவன் வீராதி வீரனென பாடு ஆண் : நல்லோர்கள் எல்லோர்க்கும் பொல்லாமை வேதம் நாள்தோறும் சொல்லித் தருவான் நல்லோர்கள் எல்லோர்க்கும் பொல்லாமை வேதம் நாள்தோறும் சொல்லித் தருவான் இங்கு கல்லார்க்கும் கற்றார்க்கும் பகவானின் கீதை கையாலே அள்ளித் தருவான் ஆண் : இவன் ராஜாங்கம் கொண்டாட போராடும் கண்ணனின் விஸ்வரூபம் வெறும் வேதாந்தம் சித்தாந்தம் பேசாத என் பிள்ளை கர்ம வீரன்…….. ராமனா பீமனா கர்ணன்தானா……. ராமனா பீமனா கர்ணன்தானா……. ஆண் : மேலான கொள்கைக்கு போராடி வாழ்வான் வீரத்தை நாடு வணங்கும் இவன் விளையாடும் புலி போல அழகாக நடப்பான் வாழ் என்று வான் முழங்கும் பெண் : கொஞ்சம் யோசித்து சொல்லுங்கள் ஆசைக்கு ஓர் பிள்ளை முத்து போலே இவன் ஆடட்டும் பாடட்டும் ஆனாலும் காணட்டும் நல்ல நாளே….. காந்தியா புத்தனா கண்ணன்தானா….. காந்தியா புத்தனா கண்ணன்தானா….. பெண் : முல்லை பூவென நாம் பெற்ற பிள்ளை முத்து மாணிக்கம் ஈடொன்றும் இல்லை ஆண் : இது நாடெங்கும் பேர் சொல்லும் தங்கம் ராமனா பீமனா கர்ணன்தானா……. பெண் : காந்தியா புத்தனா கண்ணன்தானா…..