← Back

Alangaram Kaliyatha Song Lyrics

Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Male : Alangaram kalaiyaatha silai ondru kanden Anbe un ezhil kanda orunalile Alangaram kalaiyaatha silai ondru kanden Anbe un ezhil kanda orunalile Female : Aanandha megangal poothoova kanden Aiya un mugam paartha oru naalile Aanandha megangal poothoova kanden Aiya un mugam paartha oru naalile Aiya un mugam paartha oru naalile Male : Kothodu pookanda panneer maram Pon maalai pennukku manjam tharum Kothodu pookanda panneer maram Pon maalai pennukku manjam tharum Female : Neerodu vilaiyaadi pogindra thendral Nee konjam vilaiyaada nenjam tharum Nee konjam vilaiyaada nenjam tharum Female : Alangaram kalaiyaatha silai ondru kanden Anbe un ezhil kanda orunalile Female : Undaayin undendru manam kollavo Illayin illendru vaan sellavo Male : Enge un poopandhal melangalodu Kalyana thamizh paadi nadamaaduvom Kalyana thamizh paadi nadamaaduvom Male : Alangaram kalaiyaatha silai ondru kanden Anbe un ezhil kanda orunalile Male : Thaan soodi malar thantha aandalidam Azhagana malar maalai naam vanguvom Thaan soodi malar thantha aandalidam Azhagana malar maalai naam vanguvom Female : Thaen aatchi thaan seiyum meenatchi saatchi Thaen aatchi thaan seiyum meenatchi saatchi Thiruveedhi valam vandhu ondraaguvom Thiruveedhi valam vandhu ondraaguvom Female : Alangaram kalaiyaatha silai ondru kanden Anbe un ezhil kanda orunalile Male : Alangaram kalaiyaatha silai ondru kanden Anbe un ezhil kanda orunalile
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன் அன்பே உன் எழில் கண்ட ஒரு நாளிலே அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன் அன்பே உன் எழில் கண்ட ஒரு நாளிலே பெண் : ஆனந்த மேகங்கள் பூத்தூவக் கண்டேன் அய்யா உன் முகம் பார்த்த ஒரு நாளிலே ஆனந்த மேகங்கள் பூத்தூவக் கண்டேன் அய்யா உன் முகம் பார்த்த ஒரு நாளிலே அய்யா உன் முகம் பார்த்த ஒரு நாளிலே ஆண் : கொத்தோடு பூக்கண்ட பன்னீர் மரம் பொன் மாலை பெண்ணுக்கு மஞ்சம் தரும் கொத்தோடு பூக்கண்ட பன்னீர் மரம் பொன் மாலை பெண்ணுக்கு மஞ்சம் தரும் பெண் : நீரோடு விளையாடிப் போகின்ற தென்றல் நீ கொஞ்சம் விளையாட நெஞ்சம் தரும் நீ கொஞ்சம் விளையாட நெஞ்சம் தரும் பெண் : அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன் அன்பே உன் எழில் கண்ட ஒரு நாளிலே பெண் : உண்டாயின் உண்டென்று மணம் கொள்ளவோ இல்லாயின் இல்லென்று வான் செல்லவோ ஆண் : எங்கே உன் பூப்பந்தல் மேளங்களோடு கல்யாணத் தமிழ் பாடி நடமாடுவோம் கல்யாணத் தமிழ் பாடி நடமாடுவோம் ஆண் : அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன் அன்பே உன் எழில் கண்ட ஒரு நாளிலே ஆண் : தான் சூடி மலர் தந்த ஆண்டாளிடம் அழகான மலர் மாலை நாம் வாங்குவோம் தான் சூடி மலர் தந்த ஆண்டாளிடம் அழகான மலர் மாலை நாம் வாங்குவோம் பெண் : தேனாட்சி தான் செய்யும் மீனாட்சி சாட்சி தேனாட்சி தான் செய்யும் மீனாட்சி சாட்சி திருவீதி வலம் வந்து ஒன்றாகுவோம் திருவீதி வலம் வந்து ஒன்றாகுவோம்.. பெண் : அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன் அன்பே உன் எழில் கண்ட ஒரு நாளிலே ஆண் : அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன் அன்பே உன் எழில் கண்ட ஒரு நாளிலே