← Back

Pularaadha Song Lyrics

Singers : Sid Sriram and Aishwariya Ravichandran Music by : Justin Prabhakaran Male : Pularaadha kaalai thanilae Nilavodu pesum mazhaiyil Male : Mazhai mazhai mazhai mazhai…(2) Male : Pularaadha kaalai thanilae Nilavodu pesum mazhaiyil Nanaiyaadha nizhalai polae…ae…. Nanaiyaadha nizhalai polae Yengum yengum kaadhal Chorus : Pularaa kaadhalae Punarum kaadhalae Alaraai kaadhalae Alarum kaadhalae Male : Mutham ennum kambalaiyai Yendhi vanthae Un idhazhai en idhazhum Porthi vidum Ullunarvil per amaidhi Kaninthu varum Namm udalil bootham ainthum Karaindhu vidum Male : Theeramal thooruthae Female : Theeramal thooruthae Male : Kaamathin megangal Female : Kaamathin megangal Male : Malaikkaadu pookkumae Nammodu ini ini… Chorus : Pularaa kaadhalae Punarum kaadhalae Alaraai kaadhalae Alarum kaadhalae Female : Pularaadha kaalai thanilae Nilavodu pesum mazhaiyil Pularaadha kaalai thanilae Nilavodu pesum mazhaiyil Male : Aaaa…..aaa…..aa…. Female : Aaa…..aaa….aa…. Male : Kanane kannae keecholiyae Chorus : Keecholiyae Male : Nenjil sottum moocholiyae Ullae ullae per isaiyaai Ketkkudhae Male : Oppanaigal yedhumattra Undhan iyalbum Karppanaiyil aazthugindra Kalla chirippum Innum innum venda chollum Kutti kurumbum Kaalam ulla kaalam varai Nenjil inikkum Female : Pesaatha baashaiyaai Male : Pesaatha baashaiyaai Female : Un theendal aaguthae Male : Un theendal aaguthae Female : Thaanaga pesumae En mounam ini ini Male : Hoo oo ooo hoo ooo hoo oo
பாடகர்கள் : சித் ஸ்ரீராம் மற்றும் ஐஸ்வர்யா ரவிச்சந்திரன் இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் ஆண் : புலராத காலைதனிலே நிலவோடு பேசும் மழையில் ஆண் : மழை மழை மழை மழை ….(2) ஆண் : புலராத காலைதனிலே நிலவோடு பேசும் மழையில் நனையாத நிழலை போலே….ஏ… நனையாத நிழலை போலே ஏங்கும் ஏங்கும் காதல்.. குழு : புலரா காதலே புணரும் காதலே அலராய் காதலே அலறும் காதலே ஆண் : முத்தம் என்னும் கம்பளியை ஏந்தி வந்தே உன் இதழும் என் இதழும் போர்த்தி விடும் உள்ளுணர்வில் பேர் அமைதி கனிந்து வரும் நம் உடலில் பூதம் ஐந்தும் கனிந்து விடும் ஆண் : தீராமல் தூறுதே பெண் : தீராமல் தூறுதே ஆண் : காமத்தின் மேகங்கள் பெண் : காமத்தின் மேகங்கள் ஆண் : மழைக்காடு பூக்குமே நம்மோடு இனி இனி… குழு : புலரா காதலே புணரும் காதலே அலராய் காதலே அலறும் காதலே பெண் : புலராத காலைதனிலே நிலவோடு பேசும் மழையில் புலராத காலைதனிலே நிலவோடு பேசும் மழையில் ஆண் : ஆஆ…..ஆஅ….ஆ… பெண் : ஆஅ…ஆஅ…ஆ… ஆண் : கண்ணே கண்ணே கீச்சொலியே குழு : கீச்சொலியே ஆண் : நெஞ்சில் சொட்டும் மூச்சொலியே உள்ளே உள்ளே பேரிசையாய் கேட்குதே ஆண் : ஒப்பனைகள் ஏதுமற்ற உந்தன் இயல்பும் கற்பனையில் ஆழ்த்துகின்ற கள்ள சிரிப்பும் இன்னும் இன்னும் வேண்ட சொல்லும் குட்டி குறும்பும் காலம் உள்ள காலம் வரை நெஞ்சில் இனிக்கும் பெண் : பேசாத பாஷையாய் ஆண் : பேசாத பாஷையாய் பெண் : உன் தீண்டல் ஆகுதே ஆண் : உன் தீண்டல் ஆகுதே பெண் : தானாக பேசுமே என் மௌனம் இனி இனி ஆண் : ஹோ ஓ ஓஓ ஹோ ஓஒ ஹோ ஓ