← Back

Aathangaraiyil Oru Rosa Song Lyrics

Singers : P. Susheela and P. Jayachandran Music by : Ilayaraja Lyrics by : Kannadasan Male : Aaththangaraiyil oru rosa chinna rosa Ennai alli anaikka sollichchu Konjam pakkaththil vara sollichchu Ennai parththu rasikka sollichchu Chorus : Aaththangaraiyil oru rosa chinna rosa Ennai alli anaikka sollichchu Male : Poovai parichchen ponnaaga ninaichen Poopola naan anaichchen Vaasamo ennai vaattuthu Oru vandattam naan thavichen Male : Nalla santhanaththu kaaleduththu Ennarugil nadakkaiyil Enni enni naan thudichchen Naan dhinam dhinam thookkaththai maranthaachchu Manam un ninaippil kalanthaachchu Chorus : Aaththangaraiyil oru rosa chinna rosa Ennai alli anaikka sollichchu Female : Aadiperukku aiyyaa un nenaippu Aaraaga kadhakadhappu aarumo manam therumo Idhu aaraatti un poruppu Female : Chinna kanni manam pinju manam Konji vanthu sirikkuthu Enna idhu un rasippu Naan kanavilae kanda sugam palichchaachu Adhu nejaminnu therinchaachu Female : Aaththangaraiyil oru raja chinna raja Vanthu kanna simmitti ninnuchchu Konjam kaiya pudikka sollichchu Enna katti anaikka sollichchu Chorus : ……………. Male : Aassai manasu ammaadi pudhusu aalaana ilam vayasu Female : Aaduthu dhinam paaduthu idhu vaadaatha pudhu sogusu Male : Muththu pallirukku muththazhagu sollirukku Mayakkuthu kattazhagu siru vayasu Female : Nee mella mella punnagaiyil virattaathae Intha kanni manam porukkaathae Male Chorus : Aaththangaraiyil oru rosa chinna rosa Ennai alli anaikka sollichchu Female Chorus : Konjam kaiya pudikka sollichchu Enna katti anaikka sollichchu Chorus : Thanthaana thaanathantha thaanaa thantha naanaa Thaana thaanaa thanana thanthaanaa Thanthaana thaanathantha thaanaa thantha naanaa Thaana thaanaa thanana thanthaanaa
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா என்னை அள்ளி அணைக்க சொல்லிச்சு கொஞ்சம் பக்கத்தில் வரச் சொல்லிச்சு என்னைப் பார்த்து ரசிக்க சொல்லிச்சு குழு : ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா என்னை அள்ளி அணைக்க சொல்லிச்சு ஆண் : பூவை பறிச்சேன் பொன்னாக நினைச்சேன் பூப்போல நான் அணைச்சேன் வாசமோ என்னை வாட்டுது – ஒரு வண்டாட்டம் நான் தவிச்சேன் ஆண் : நல்ல சந்தனத்து காலெடுத்து என்னருகில் நடக்கையில் எண்ணி எண்ணி நான் துடிச்சேன் நான் தினம் தினம் தூக்கத்தை மறந்தாச்சு மனம் உன் நினைப்பில் கலந்தாச்சு குழு : ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா என்னை அள்ளி அணைக்க சொல்லிச்சு பெண் : ஆடிப்பெருக்கு ஐயா உன் நெனைப்பு ஆறாத கதகதப்பு ஆறுமோ மனம் தேறுமோ இது ஆறாட்டி உன் பொறுப்பு பெண் : சின்ன கன்னி மனம் பிஞ்சு மனம் கொஞ்சி வந்து சிரிக்குது என்ன இது உன் ரசிப்பு நான் கனவிலே கண்ட சுகம் பலிச்சாச்சு அது நெஜமின்னு தெரிஞ்சாச்சு பெண் : ஆத்தங்கரையில் ஒரு ராஜா சின்ன ராஜா வந்து கண்ண சிமிட்டி நின்னுச்சு கொஞ்சம் கைய புடிக்க சொல்லிச்சு என்ன கட்டி அணைக்க சொல்லிச்சு குழு : ……………………… ஆண் : ஆசை மனசு அம்மாடி புதுசு ஆளான இளம் வயசு பெண் : ஆடுது தினம் பாடுது இது வாடாத புது சொகுசு ஆண் : முத்து பல்லிருக்கு முத்தழகு சொல்லிருக்கு மயக்குது கட்டழகு சிறு வயசு பெண் : நீ மெல்ல மெல்ல புன்னகையில் விரட்டாதே இந்த கன்னி மனம் பொறுக்காதே ஆண் குழு : ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா என்னை அள்ளி அணைக்க சொல்லிச்சு பெண் குழு : கொஞ்சம் கைய புடிக்க சொல்லிச்சு என்ன கட்டி அணைக்க சொல்லிச்சு குழு : தந்தான தானதந்த தானா தந்த நானா தான தானா தானன தந்தானா தந்தான தானதந்த தானா தந்த நானா தான தானா தானான தந்தானா…….