← Back

Thambathyam Oru Sangeetham Song Lyrics

Singer : M. S. Viswanathan Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male : Thambathiyam oru sangeetham Thambathiyam oru sangeetham Sruthi layam nayam kondaadum deva keerthaanam Adhuthaan raaga thaala baavam koorum kadhal mandhiram Male : Thambathiyam oru sangeetham……..sangeetham…. Male : Jaathakangal vagutha vazhi Jaathigalin uravai kondu Moothavargal samathika Manathavargal palarundu Male : Kaadhalenum veethiyile Kan varitha uravai kondu Maalayitu medaiyinilae Mananthavargal silarumundu Male : Thambathiyam oru sangeetham……..sangeetham…. Male : Omam kundam nei vaarthu Agniyai valam vanthu Oorariya kai pidithu Uravu kooda pirivathundu Male : Sattangalai saatchi vaithu Pathirathil pathivu seithu Saagum varai piriyaadha Thambadhigal ullagil undu Male : Thambathiyam oru sangeetham……..sangeetham…. Male : Naayagangum naayagiyum Nenju rendu inaiyaamal Naalukoru kutram solli Aalukoru dhisai paarthal Male : Endha vagai thirumanamum Idaiyinil udaivathundu Thaalam keta paadalai pol Kolam ketu povathundu Male : Thambathiyam oru sangeetham Sangeetham…….sangeetham….
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : தாம்பத்யம் ஒரு சங்கீதம் தாம்பத்யம் ஒரு சங்கீதம் ஸ்ருதி லயம் நயம் கொண்டாடும் தேவ கீர்த்தனம் அதுதான் ராக தாள பாவம் கூறும் காதல் மந்திரம் ஆண் : தாம்பத்யம் ஒரு சங்கீதம்…….சங்கீதம்…….. ஆண் : ஜாதகங்கள் வகுத்த வழி ஜாதிகளின் உறவைக் கொண்டு மூத்தவர்கள் சம்மதிக்க மணந்தவர்கள் பலருண்டு ஆண் : காதலெனும் வீதியிலே கண் வரித்த உறவைக் கொண்டு மாலையிட்டு மேடையிலே மணந்தவர்கள் சிலருமுண்டு ஆண் : தாம்பத்யம் ஒரு சங்கீதம்…….சங்கீதம்…….. ஆண் : ஓமக் குண்டம் நெய் வார்த்து அக்னியை வலம் வந்து ஊரறிய கைப் பிடித்த உறவு கூட பிரிவதுண்டு ஆண் : சட்டங்களை சாட்சி வைத்து பத்திரத்தில் பதிவு செய்து சாகும் வரை பிரியாத தம்பதிகள் உலகில் உண்டு ஆண் : தாம்பத்யம் ஒரு சங்கீதம்…….சங்கீதம்…….. ஆண் : நாயகனும் நாயகியும் நெஞ்சு ரெண்டு இணையாமல் நாளுக்கொரு குற்றம் சொல்லி ஆளுக்கொரு திசை பார்த்தால் ஆண் : எந்த வகை திருமணமும் இடையினில் உடைவதுண்டு தாளம் கெட்ட பாடலை போல் கோலம் கெட்டு போவதுண்டு ஆண் : தாம்பத்யம் ஒரு சங்கீதம்……. சங்கீதம்……..சங்கீதம்……