← Back

Vizhiyaal Kadhal Song Lyrics

Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : T. K. Ramamoorthy Lyrics by : Vaali Male : Vizhiyaal kaadhal kadidham Female : Varaindhaal aasai amudham Male : Vanna solaiyil maalaiyil paarkka Female : Ho ho Male : Hmm Female : Chinna poonguyil paadalai ketkka Male : Hahahaha Both : Vizhiyaal kaadhal kadidham Varaindhaal aasai amudham Vanna solaiyil maalaiyil paarkka Chinna poonguyil paadalai ketkka Male : Pani pol paarvai minna Kani pol vaarthai sonna Pani pol paarvai minna Kani pol vaarthai sonna Silai mael kaadhal konden Siripil kavidhai kanden Female : Idhudhaan maalai mayakkam Irukkum vaazhum varaikkum Idhudhaan maalai mayakkam Irukkum vaazhum varaikkum Edhudhaan uravin ellai Endraal vaarthai illai Male : Kan mel Female : Nadanthen Male : Kai mel Female : Kidandhen Male : Malar pol Female : Malarndhen Male : Madi mel Female : Vizhundhen Both : Kulir neeradalaam Both : Vizhiyaal kaadhal akdidham Varaindhaal aasai amudham Vanna solaiyil maalaiyil paarkka Chinna poonguyil paadalai ketkka Male : Medhuvaai maeni anaikka Pudhidhaai paadam padikka Idhazhaal thaagam thaniya Irukkum mogam kaniya Female : Mudhalil naanam thadukkum Mugathai moodi muraikkum Manadhil aaval pirakkum Mudivil vaari kodukkum Male : Vetkam Female : Maraiyum Male : Sorgam Female : Puriyum Male : Paadhai Female : Theriyum Male : Payanam Female : Thodarum Both : Parandhae odalaam Both : Vizhiyaal kaadhal akdidham Varaindhaal aasai amudham Vanna solaiyil maalaiyil paarkka Chinna poonguyil paadalai ketkka Both : Ahaa ahaa ahaaa..hoho hoho hoho
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுசீலா இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : விழியால் காதல் கடிதம் பெண் : வரைந்தாள் ஆசை அமுதம் ஆண் : வண்ணச் சோலையில் மாலையில் பார்க்க பெண் : ஹோ ஹோ ஆண் : ஹ்ம் பெண் : சின்னப் பூங்குயில் பாடலைக் கேட்க இருவர் : விழியால் காதல் கடிதம் வரைந்தாள் ஆசை அமுதம் வண்ணச் சோலையில் மாலையில் பார்க்க சின்னப் பூங்குயில் பாடலைக் கேட்க ஆண் : பனி போல் பார்வை மின்ன கனி போல் வார்த்தை சொன்ன பனி போல் பார்வை மின்ன கனி போல் வார்த்தை சொன்ன சிலை மேல் காதல் கொண்டேன் சிரிப்பில் கவிதை கண்டேன் பெண் : இதுதான் மாலை மயக்கம் இருக்கும் வாழும் வரைக்கும் இதுதான் மாலை மயக்கம் இருக்கும் வாழும் வரைக்கும் எதுதான் உறவின் எல்லை என்றால் வார்த்தை இல்லை ஆண் : கண் மேல்……..பெண் : நடந்தேன் ஆண் : கை மேல்…….பெண் : கிடந்தேன் ஆண் : மலர் போல்……..பெண் : மலர்ந்தேன் ஆண் : மடி மேல்…….பெண் : விழுந்தேன் இருவர் : குளிர் நீராடலாம் இருவர் : விழியால் காதல் கடிதம் வரைந்தாள் ஆசை அமுதம் வண்ணச் சோலையில் மாலையில் பார்க்க சின்னப் பூங்குயில் பாடலைக் கேட்க ஆண் : மெதுவாய் மேனி அணைக்க புதிதாய்ப் பாடம் படிக்க இதழால் தாகம் கனிய இருக்கும் மோகம் தணிய பெண் : முதலில் நாணம் தடுக்கும் முகத்தை மூடி மறைக்கும் மனதில் ஆவல் பிறக்கும் முடிவில் வாரிக் கொடுக்கும் ஆண் : வெட்கம்………பெண் : மறையும் ஆண் : சொர்க்கம்……..பெண் : புரியும் ஆண் : பாதை……….பெண் : தெரியும் ஆண் : பயணம்……..பெண் : தொடரும்…. இருவர் : பறந்தே ஓடலாம் இருவர் : விழியால் காதல் கடிதம் வரைந்தாள் ஆசை அமுதம் வண்ணச் சோலையில் மாலையில் பார்க்க சின்னப் பூங்குயில் பாடலைக் கேட்க இருவர் : ஆஹா ஆஹா ஆஹா ஓஹோ ஓஹோ ஓஹோ …