← Back

Aaduvathu Vetrimayil Song Lyrics

Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Male : Aaduvadhu vettri mayil Minnuvadhu vel vizhigal Paaduvadhu kovil maniyosai Theduvathu rojaa poomaalai Female : Aaduvadhu vettri mayil Minnuvadhu vel vizhigal Paaduvadhu kovil maniyosai Theduvathu rojaa poomaalai Male : Aatrangaraiyoo thottakalaiyoo Aadai pinnum pinnal enna moodum thiraiyoo Female : Athipazhamoo muthusaramoo Annam polae minnum kanni athai magalo Male : Idhil sandhegama Female : Vilai en dhegama Male : Idhil sandhegama Female : Vilai en dhegama Male : Ada oodal seidhaal Pennukenna sandhosam Female : Siru oodal endraal Nanam thaanae sanyasama Male : Aaduvadhu vettri mayil Minnuvadhu vel vizhigal Female : Paaduvadhu kovil maniyosai Theduvathu rojaa poomaalai Female : Velli vattamoo konjam thittamoo Katti katti konjam Inbam indru mattumo Male : Indru maattumo endrum varumo Kaalam sella sella ullam Vegam kollumoo Female : Sugam polladhadhu Male : Mudivilladhadhu Female : Sugam polladhadhu Male : Mudivilladhadhu Female : Andha sorgam kooda Pakkam vandhaal nilladhadhu Male : Anage acham naanam vetkam Ellaam selladhadhu Male : Aaduvadhu vettri mayil Minnuvadhu vel vizhigal Female : Paaduvadhu kovil maniyosai Theduvathu rojaa poomaalai
பாடகர்கள் : டி. எம் .சௌந்தர்ராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஆடுவது வெற்றி மயில் மின்னுவது வேல் விழிகள் பாடுவது கோவில் மணியோசை தேடுவது ரோஜா பூமாலை பெண் : ஆடுவது வெற்றி மயில் மின்னுவது வேல் விழிகள் பாடுவது கோவில் மணியோசை தேடுவது ரோஜா பூமாலை ஆண் : ஆற்றங்கரையோ தோட்டக்கலையோ ஆடைப் பின்னும் பின்னல் என்ன மூடும் திரையோ பெண் : அத்திப்பழமோ முத்துச்சரமோ அன்னம் போலே மின்னும் கன்னி அத்தை மகளோ ஆண் : இதில் சந்தேகமா பெண் : விலை என் தேகமா ஆண் : இதில் சந்தேகமா பெண் : விலை என் தேகமா ஆண் : அட ஊடல் செய்தால் பெண்ணுக்கென்ன சந்தோஷமா பெண் : சிறு ஊடல் என்றால் நாணம்தானே சன்யாசமா ஆண் : ஆடுவது வெற்றி மயில் மின்னுவது வேல் விழிகள் பெண் : பாடுவது கோவில் மணியோசை தேடுவது ரோஜா பூமாலை பெண் : வெள்ளி வட்டமோ கொஞ்சும் திட்டமோ கட்டிக் கட்டிக் கொஞ்சும் இன்பம் இன்று மட்டுமோ ஆண் : இன்று மட்டுமோ என்றும் வருமோ காலம் செல்ல செல்ல உள்ளம் வேகம் கொள்ளுமோ பெண் : சுகம் பொல்லாதது ஆண் : முடிவில்லாதது பெண் : சுகம் பொல்லாதது ஆண் : முடிவில்லாதது பெண் : அந்த சொர்க்கம் கூட பக்கம் வந்தால் நில்லாதது ஆண் : அங்கே அச்சம் நாணம் வெட்கம் எல்லாம் செல்லாதது ஆண் : ஆடுவது வெற்றி மயில் மின்னுவது வேல் விழிகள் பெண் : பாடுவது கோவில் மணியோசை தேடுவது ரோஜா பூமாலை…..