← Back

Vellipanathukkum Song Lyrics

Singer : P. B. Sreenivas Music by : K. V. Mahadevan Male : Velli panathukkum Nalla gunathukkum vegu dhooram Velli panathukkum Nalla gunathukkum vegu dhooram Idhu ullapadi indha ulagam Unarthum oru paadam Velli panathukkum Nalla gunathukkum vegu dhooram Male : Pillai enum bandha paasathai Thalli pirindhodum Than ullatthai irumbu pettagamaakki Thaazh podum Illaadhavar evaraana podhilum Elli nagaiyaadum Illaadhavar evaraana podhilum Elli nagaiyaadum Inai illaadha annai anbukku kooda Sollaal thadai podum Male : Velli panathukkum Nalla gunathukkum vegu dhooram Male : Vellathinaal varum palla maedu pol Selvam varum pogum Idhai ellalavaenum ennaadha kanjarkku Thunbam varavaagum Male : Kallamillaadha anbu selvamae Endrum nilaiyaagum Kallamillaadha anbu selvamae Endrum nilaiyaagum Kashatam theerum kavalaigal maarum Inbam uruvaagum Male : Velli panathukkum Nalla gunathukkum vegu dhooram Idhu ullapadi indha ulagam Unarthum oru paadam Male : Velli panathukkum Nalla gunathukkum vegu dhooram
பாடகர் : பி. பி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : வெள்ளி பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகு தூரம் வெள்ளி பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகு தூரம் இது உள்ளபடி இந்த உலகம் உணர்த்தும் ஒரு பாடம் வெள்ளி பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகு தூரம் ஆண் : பிள்ளை எனும் பந்த பாசத்தை தள்ளி பிரிந்தோடும் தன் உள்ளத்தை இரும்பு பெட்டகமாக்கி தாழ் போடும் இல்லாதவர் எவரான போதிலும் எள்ளி நகையாடும் இல்லாதவர் எவரான போதிலும் எள்ளி நகையாடும் இணை இல்லாத அன்னை அன்புக்கு கூட சொல்லால் தடை போடும் ஆண் : வெள்ளி பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகு தூரம் ஆண் : வெள்ளத்தினால் வரும் பள்ள மேடு போல் செல்வம் வரும் போகும் இதை எள்ளளவேனும் எண்ணாத கஞ்சர்க்கு துன்பம் வரவாகும் ஆண் : கள்ளமில்லாத அன்பு செல்வமே என்றும் நிலையாகும் கள்ளமில்லாத அன்பு செல்வமே என்றும் நிலையாகும் கஷ்டம் தீரும் கவலைகள் மாறும் இன்பம் உருவாகும் ஆண் : வெள்ளி பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகு தூரம் இது உள்ளபடி இந்த உலகம் உணர்த்தும் ஒரு பாடம் ஆண் : வெள்ளி பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகு தூரம்