← Back

Idhuvum Kadandhu Pogum Reprise Song Lyrics

Singers : Bombay Jayashri and Amrit Ramnath Music by : Girishh Gopalakrishnan Both : Pogum paadhaigalum vaazhvin thevaigalum Padipinai koduthidumae Mudiyadha kelvigalum aazha thedalgalum Vazhigalai amaithidumae Female : Mazhai kaatrodu odichendru Nilam serumae Chorus : Nilam serumae Female : Adhu yedho or saayal kondu Uyir vazhumae Chorus : Uyir vazhumae Female : Sudari sudari vazhigal neethaanae Ozhiyaai milirum veliyum neethaanae Vilakaal malar thaan adi pookaadhae Kizhakaai irundhaal irul seraadhae Female : Idhuvum kadandhu pogum Idhuvum kadandhu pogum Female : Unai nee rasithaal muzhudhaai vasithaal Idham thaan indha thanimaiyae Thuyaril sirithaal idarai edhirthaal Kanamum oru muzhumaiyae Female : Sogathaal edhu thaan maaridum Kanneer vittaal chediyai poothidum Ennaagum vaa vazhndhae paarthidalaam Female : Dhinam nee thedum vaazhkai engo Unai thaedumae Adhu unakkaana kaalam vandhaal Unai serumae Female : Sudari sudari murangal maaradhae Manam thaan thelindhaal mayakam neradhae Azhagae sudari adi yengadhae Parivin thinavai vazhi thaangadhae Female : Idhuvum kadandhu pogum Idhuvum kadandhu pogum Idhuvum kadandhu pogum Idhuvum kadandhu pogum Idhuvum kadandhu pogum Female : Kadandhu pogum Kadandhu pogum Kadandhu pogum Kadandhu pogum Kadandhu pogum Kadandhu …pogum……
பாடகர்கள் : பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் அம்ரித் ராம்நாத் இசை அமைப்பாளர் : கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இருவர் : போகும் பாதைகளும் வாழ்வின் தேவைகளும் படிப்பினை கொடுத்திடுமே முடியாத கேள்விகளும் ஆழ தேடல்களும் வழிகளை அமைத்திடுமே பெண் : மழை காற்றோடு ஓடி சென்று நிலம் சேருமே குழு : நிலம் சேருமே பெண் : அது ஏதோ ஓர் சாயல் கொண்டு உயிர் வாழுமே குழு : உயிர் வாழுமே பெண் : சுடரி சுடரி வலிகள் நீதானே ஒளியாய் மிளிரும் வெளியும் நீதானே விளக்கால் மலர் தான் அடி பூக்காதே கிழக்காய் இருந்தால் இருள் சேராதே பெண் : இதுவும் கடந்து போகும் …(2) பெண் : உன்னை நீ ரசித்தால் முழுதாய் வசித்தால் இதம் தான் இந்த தனிமையே துயரில் சிரித்தால் இடரை எரித்தால் கணமும் ஒரு முழுமையே பெண் : சோகத்தால் எது தான் மாறிடும் கண்ணீர் விட்டால் செடியாய் பூத்திடும் என்னாகும் வா வாழ்ந்தே பார்த்திடலாம் பெண் : தினம் நீ தேடும் வாழ்க்கை எங்கோ உன்னை தேடுமே அது உனக்கான காலம் வந்தால் உன்னை சேருமே பெண் : சுடரி சுடரி முரண்கள் மாறாதே மனம் தான் தெளிந்தால் மயக்கம் நேராதே அழகே சுடரி அடி ஏங்காதே பரிவின் தினவை வலி தாங்காதே பெண் : இதுவும் கடந்து போகும் ….(5) பெண் : கடந்து போகும் …(5) கடந்து…போகும் ..