← Back

Ada Vazhumbothu Manithane Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Deva Male : Ada vaazhupothu manithanae Oru malaiyaai vaazhadaa Ada veezhumpothum mannilae Oru vidhaiyaai veezhadaa Male : Ingu nalaigal enbavai oru nambikkaithanadaa Nee ezhunthaal pothum imayam unakku keezhadaa Male : Oru vedan vedan varugiraan Palar vedam kalaikka viraikiraan Male : Ada mannil veezhum neerthuli Adhu maranam kaanumaa Adhan vadivam thottram maaralaam Uru marainthae pogumaa Male : nee theeyaai poividu unai eekkal theendumaa Ada phoenix paravai eriththaalkooda saagumaa Male : Oru vedan vedan varugiraan Palar vedam kalaikka viraikiraan Male : Ada maraththin kilaigal veezhnthapin Adhu marupadi thulirkkumae Antha vaanil nilavu theainthapin Adhu marupadi valarumae Male : Karumpaarai idukkilum Sil vergal mulaikkumae Idhai unarvaai manithaa Unakkum nambikkai pirakkumae Male : Pudhu vedan vedan neeyadaa Ini vengai maelae paayadaa Male : Ila raththakarai konda latchiyam Adhu saayam povathillaiyae Pala thazhumbu vaangiya thaththuvam Endrum vizhunthu povathillaiyae Male : Endrum thuninthavan vaazhakkaiyil Oru tholviyum illaiyae Ada karumaththai mudippavan Pirappathum irappathum illaiyae Male : Ungal vedan vedan varugiraan Thara vettai aada varugiraan….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா ஆண் : அட வாழும்போது மனிதனே ஒரு மலையாய் வாழடா அட வீழும் போதும் மண்ணிலே ஒரு விதையாய் வீழடா ஆண் : இங்கு நாளைகள் என்பவை ஒரு நம்பிக்கைதானடா நீ எழுந்தால் போதும் இமயம் உனக்கு கீழடா ஆண் : ஒரு வேடன் வேடன் வருகிறான் பலர் வேடம் கலைக்க விரைகிறான்…. ஆண் : அட மண்ணில் வீழும் நீர்த்துளி அது மரணம் காணுமா அதன் வடிவம் தோற்றம் மாறலாம் உரு மறைந்தே போகுமா ஆண் : நீ தீயாய் போய்விடு உனை ஈக்கள் தீண்டுமா அட பீனிக்ஸ் பறவை எரித்தால் கூட சாகுமா ஆண் : ஒரு வேடன் வேடன் வருகிறான் பலர் வேடம் கலைக்க விரைகிறான்…. ஆண் : அட மரத்தின் கிளைகள் வீழ்ந்தப்பின் அது மறுபடி துளிர்க்குமே அந்த வானில் நிலவு தேய்ந்தப்பின் அது மறுபடி வளருமே ஆண் : கரும்பாறை இடுக்கிலும் சில வேர்கள் முளைக்குமே இதை உணர்வாய் மனிதா உனக்கும் நம்பிக்கை பிறக்குமே ஆண் : புது வேடன் வேடன் நீயடா இனி வேங்கை மேலே பாயடா….. ஆண் : இள ரத்தக்கறை கொண்ட லட்சியம் அது சாயம் போவதில்லையே பல தழும்பு வாங்கிய தத்துவம் என்றும் விழுந்து போவதில்லையே ஆண் : என்றும் துணிந்தவன் வாழ்க்கையில் ஒரு தோல்வியும் இல்லையே அட கருமத்தை முடிப்பவன் பிறப்பதும் இறப்பதும் இல்லையே….. ஆண் : உங்கள் வேடன் வேடன் வருகிறான் தர வேட்டை ஆட வருகிறான்…