← Back

Virunthukku Vara Solladi Song Lyrics

Singers : S. Janaki and L. R. Eswari Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female : Virunthukku vara solladi Veerathil singam paarvaiyil azhagan Mannavanaagum thirunaal indru Thirunaal thirunaal thirunaal indru Female : Virunthukku vara solladi Veerathil singam paarvaiyil azhagan Mannavanaagum thirunaal indru Thirunaal thirunaal thirunaal indru Female : Kaattukku raja mudisoottu Kannae paadadi oru paattu Paattukku thaalam pottukka raaja Aarambam aagattum vilaiyattu Female : Pazhagi pazhagi konjam Vilagi vilagi vandhu Paruvathu kaadhal vazhikattu Vilaiyattu mudi soottu Virunthukku vara solladi Female : Therkku malai paruva kaattru Theda nikkuthu paathukko Thaen kudathil ennai alli pottukoo Pakkathilae vellam undu Anaiyai pottu thaduthukko Padagai pola mella mella medhandhukko Female : Akkaraikkum ikkaraikkum odikkoo Aalavandha rajavaiyum paadikko Female : Virunthukku vara solladi Veerathil singam paarvaiyil azhagan Mannavanaagum thirunaal indru Thirunaal thirunaal thirunaal indru Female : Ilaiyudhir kaalam poyaachu Thalir vidum kaalam vandhaachu Ellorum onna villodu ninna Edhirpavai ellam thoolaachu Female : Enakku enakku nalla Poluthu poluthu endru Inbathil vilundhaal sugam aachu Nalam aachu uravaachu Female : Virunthukku vara solladi Veerathil singam paarvaiyil azhagan Mannavanaagum thirunaal indru Thirunaal thirunaal thirunaal indru
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : விருந்துக்கு வரச் சொல்லடி வீரத்தில் சிங்கம் பார்வையில் அழகன் மன்னவனாகும் திருநாள் இன்று திருநாள் திருநாள் திருநாள் இன்று……! பெண் : விருந்துக்கு வரச் சொல்லடி வீரத்தில் சிங்கம் பார்வையில் அழகன் மன்னவனாகும் திருநாள் இன்று திருநாள் திருநாள் திருநாள் இன்று. பெண் : காட்டுக்கு ராஜா முடிசூட்டு கண்ணே பாடடி ஒரு பாட்டு பாட்டுக்குத் தாளம் போட்டுக்க ராஜா ஆரம்பம் ஆகட்டும் விளையாட்டு பெண் : பழகிப் பழகிக் கொஞ்சம் விலகி விலகி வந்து பருவத்துக் காதல் வழிக்காட்டு விளையாட்டு முடி சூட்டு விருந்துக்கு வரச் சொல்லடி…………..! பெண் : தெற்கு மலைப் பருவக் காற்று தேட நிக்குது பாத்துக்கோ தேன் குடத்தில் என்னை அள்ளிப் போட்டுக்கோ பக்கத்திலே வெள்ளமுண்டு அணையைப் போட்டு தடுத்துக்கோ படகைப்போல மெல்ல மெல்ல மெதந்துக்கோ பெண் : அக்கரைக்கும் இக்கரைக்கும் ஓடிக்கோ ஆளவந்த ராஜாவையும் பாடிக்கோ பெண் : விருந்துக்கு வரச் சொல்லடி வீரத்தில் சிங்கம் பார்வையில் அழகன் மன்னவனாகும் திருநாள் இன்று திருநாள் திருநாள் திருநாள் இன்று. பெண் : இலையுதிர் காலம் போயாச்சு துளிர்விடும் காலம் வந்தாச்சு எல்லோரும் ஒண்ணா வில்லோடு நின்னா எதிர்ப்பவை எல்லாம் தூளாச்சு பெண் : எனக்கு எனக்கு நல்ல பொழுது பொழுது என்று இன்பத்தில் விழுந்தாள் சுகமாச்சு நலமாச்சு உறவாச்சு பெண் : விருந்துக்கு வரச் சொல்லடி வீரத்தில் சிங்கம் பார்வையில் அழகன் மன்னவனாகும் திருநாள் இன்று திருநாள் திருநாள் திருநாள் இன்று