← Back

Ennavale Adi Ennavale Song Lyrics

Singer : P. Unnikrishnan Music by : A.R. Rahman Female : Mmm mmm mmm mmm mmm mmm mmm Male : Ennavalae adi ennavalae Endhan idhayathai tholaithu vitten Endha idam adhu tholaintha idam Andha idathaiyum maranthu vitten Male : Undhan kaal kolusil Adhu tholainthadhendru Undhan kaaladi thedi vanthen Male : Kaadhal endraal perum avasthaiyendru Unnai kandathum kandu konden Endhan kazhuthu varai indru kaadhal vanthu Iru kanvizhi pithungi nindren Male : Ennavalae adi ennavalae Endhan idhayathai tholaithu vitten Female : ………………………………. Male : Vaai mozhiyum enthan thaai mozhiyum Indru vasapada villaiyadi Vayitrukum thondaikum uruvamilla Oru urundayum uruzhuthadi Male : Kaathirunthaal ethir paarthirunthaal Oru nimisamum varusamadi Kangal ellam ennai paarpathupol Oru kalakamum thondruthadi Male : Idhu sorgamaa Naragamaa solladi ullapadi Naan vaazhvathum vidaikondu Povathum un vaarthaiyil ullathadi Male : Ennavalae adi ennavalae Endhan idhayathai tholaithu vitten Female : ……………………………………….. Male : Gokilamae nee kural koduthaal Unnai kumbitu kan adipen Gopuramae unnai saaithukondu Undhan koonthalil meen pidipen Male : Vennilavae unnai thoonkavaika Undhan viraluku sodukedupen Varudavarum poongaatraiyellam Konjam vadikatti anupivaipen Male : En kaadhalin thevaiyai Kaadhukul odhivaipen Un kaaladi ezhuthiya kolangal Puthu kavithaigal endruraipen Male : Ennavalae adi ennavalae Endhan idhayathai tholaithu vitten
பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான் பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆண் : என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன் எந்த இடம் அது தொலைந்த இடம் அந்த இடத்தையும் மறந்து விட்டேன் ஆண் : உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன் காலடி தேடி வந்தேன் ஆண் : காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக் கண்டதும் கண்டு கொண்டேன் எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து இரு கண்விழி பிதுங்கி நின்றேன் ஆண் : என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன் பெண் : …………………………… ஆண் : வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருலுதடி ஆண் : காத்திருந்தால் எதிா் பாா்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி கண்களெல்லாம் எனைப் பாா்ப்பதுபோல் ஒரு கலக்கமும் தோன்றுதடி ஆண் : இது சொா்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும் உன் வாா்த்தையில் உள்ளதடி ஆண் : என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன் பெண் : …………………………… ஆண் : கோகிலமே நீ குரல் கொடுத்தால் உன்னை கும்பிட்டுக் கண்ணடிப்பேன் கோபுரமே உன்னைச் சாய்த்துக்கொண்டு உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன் ஆண் : வெண்ணிலவே உன்னைத் தூங்கவைக்க உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன் வருடவரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன் ஆண் : என் காதலின் தேவையை காதுக்குள் ஓதிவைப்பேன் உன் காலடி எழுதிய கோலங்கள் புதுக் கவிதைகள் என்றுரைப்பேன் ஆண் : என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்