← Back

Ashta Thikkilum Soozhum Song Lyrics

Singer : Madhava Benthi Music by : Ghantasala Lyrics by : Thanjai N. Ramaiah Dass Male : Astathikkilum soozhum mattattra kirithorum Angengum en kodi parakka vendum Aagaaya mudhal bhuvana paathaalam varai ennai Adi panindhu engum poojikka vendum Male : Pattatthin vendharum pala kodi maandharum Panivodu en kattalaiyai yerkka vendum Bhagirangamaagavae kadathgaja vaazhi ena Parivodu asurar pottri pugazha vendum Male : Naanae ivvulaginai aala vendum Naanae pon nadhiyaavum adaiya vendum Naanae en uttraarukku udhaviya perumaiyin Nanmaiyai immaiyil kaana vendum
பாடகர் : மாதவா பென்தி இசை அமைப்பாளர் : கண்டசாலா பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ் ஆண் : அஷ்டதிக்கிலும் சூழும் மட்டற்ற கிரிதோறும் அங்கெங்கும் என் கொடி பறக்க வேண்டும் ஆகாய முதல் புவன பாதாளம் வரை என்னை அடிப் பணிந்து எங்கும் பூஜிக்க வேண்டும் ஆண் : பட்டத்தின் வேந்தரும் பல கோடி மாந்தரும் பணிவோடு என் கட்டளையை ஏற்கவேண்டும் பகிரங்கமாகவே கடோத்கஜ வாழீ என பரிவோடு அசுரர் போற்றிப் புகழ வேண்டும் ஆண் : நானே இவ்வுலகினை ஆள வேண்டும் நானே பொன் நிதி யாவும் அடைய வேண்டும் நானே என் உற்றாருக்கு உதவிய பெருமையின் நன்மையை இம்மையில் காண வேண்டும்……!