← Back

Naan Thozhum Deivame Song Lyrics

Singer : Sathyaprakash Music by : Sam C.S Male : Hoo…hooo ooo ho oo hooh ooo… Male : Naan thozhum deivamae pogudhae yen Yaar ini vaazhvilae yenginen naan Male : Aagayam saayudhae anmaavum pogudhae Appa un nyabagam neengiduma Aaraadhu kaayamae theeraadhu sogamae Appa en nenjamum thaangiduma Male : Needhaan en udhiram Needhaan en ulagam appaaaa… Male : Thozhil eri oonjal aadi Undhan maarbil thoonginen Kovil thedi pona podhum Unnai thaanae vendinen Male : Ada appaavin vervai dhaan sotrilae Dhinam uppaagum ellorin veettilae Male : Needhaan en udhiram Needhaan en ulagam appaaa…. Male : Paavam enna naanum seidhen Paasa theeyil veguren Meendum undhan vaarthai ketka Naanum mannil vaazhgiren Male : Ingu en aayul serthae Nee vaazhnthidu Engu sendraalum ennai nee sernthidu Appa engira aani veraiyum tholachen……… Male : Hoo…hooo ooo ho oo hooh ooo..
பாடகர் : சத்யபிரகாஷ் இசை அமைப்பாளர் : சாம் சி . எஸ். ஆண் : ஹோ…ஹோ….ஓ …ஹோ …. ஆண் : நான் தொழும் தெய்வமே போகுதே ஏன் யார் இனி வாழ்விலே ஏங்கினேன் நான் ஆண் : ஆகாயம் சாயுதே ஆன்மாவும் போகுதே அப்பா உன் ஞாபகம் நீங்கிடுமா ஆறாது காயமே தீராது சோகமே அப்பா என் நெஞ்சமும் தாங்கிடுமா ஆண் : நீதான் என் உதிரம் நீதான் என் உலகம் அப்பா ஆண் : தோளில் ஏறி ஊஞ்சல் ஆடி உந்தன் மார்பில் தூங்கினேன் கோவில் தேடி போன போதும் உன்னை தானே வேண்டினேன் ஆண் : அட அப்பாவின் வேர்வைதான் சோற்றிலே தினம் உப்பாகும் எல்லோரின் வீட்டிலே ஆண் : நீதான் என் உதிரம் நீதான் என் உலகம் அப்பா ஆண் : பாவம் என்ன நானும் செய்தேன் பாச தீயில் வேகுறேன் மீண்டும் உந்தன் வார்த்தை கேட்க நானும் மண்ணில் வாழ்கிறேன் ஆண் : இங்கு என் ஆயுள் சேர்த்தே நீ வாழ்ந்திடு எங்கே சென்றாலும் என்னை நீ சேர்ந்திடு அப்பா என்கிற ஆணி வேரையும் தொலச்சேன் ஆண் : ஹோ…ஹோ….ஓ …ஹோ ….