← Back

Vaa Vaa En Devathaye Song Lyrics

Singer : Madhu Balakrishnan Music by : Vidyasagar Male : {Vaa vaa en devathaiyae Pon vaai pesum thaaragaiyae Poi vaazhvin..pooranamae Penn poovae..vaa..} (2) Male : Vaan mithakkum..kangalukku Mayiliragaal..maii idava Maarbuthaikkum kaalgalukku Mani kolusu..naan idava Male : Vaa vaa en devathaiyae Pon vaai pesum thaaragaiyae Poi vaazhvin..pooranamae Penn poovae..vaa… Male : Selva magal Alughaip pol Oru sillendra Sangeetham ketathillai Male : Pon magalin..Punnagai pol Yuga pookkalukku Punnaigaikka Theriyavillai Male : En pillai..Ettu vaitha Nadaiyai pola Endha ilakkana kavithaiyum Nadantha thillai Male : Muthukkal therikindra Mazhalai pola Oru munnooru Mozhigalil vaarthai illai Male : Thanthaikkum thaai Amutham suranthathamma En thangathai maarbodu Anaikkaiyilae Male : Vaa vaa en devathaiyae Pon vaai pesum thaaragaiyae Poi vaazhvin..pooranamae Penn poovae..vaa… Male : Pillai nila..palli sella Aval kaiyodu en idhayam Thudikka kanden Male : Deiva magal..thoongayilae Sila deivangal Thoongugindra Azhagai kanden Male : Sitraadai katti aval Siritha pothu..ennai Petraval saayal endru Pesi konden Male : Mel naattu aadai katti Nadantha pothu..ival Meesai illatha Magan endru sonnen Male : Penn pillai Thani arai pugunthathilae Oru pirivukku othigaiyai Paarthu konden Male : {Vaa vaa en devathaiyae Pon vaai pesum thaaragaiyae Poi vaazhvin..pooranamae Penn poovae..vaa..} (2) Male : Vaan mithakkum..kangalukku Mayiliragaal..maii idava Maarbuthaikkum kaalgalukku Mani kolusu..naan idava…
பாடகா் : மது பாலகிருஷ்ணன் இசையமைப்பாளா் : வித்யாசாகர் ஆண் : { வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா } (2) ஆண் : வான் மிதக்கும் கண்களுக்கு மயில் இறகால் மையிடவா மார்புதைக்கும் கால்களுக்கு மணி கொலுசு நான் இடவா ஆண் : வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா ஆண் : செல்வ மகள் அழுகை போல் ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை ஆண் : பொன் மகளின் புன்னகைப்போல் யுக பூக்களுக்கு புன்னகைக்க தெரியவில்லை ஆண் : என் பிள்ளை எட்டு வைத்த நடையை போல எந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை ஆண் : முத்துக்கள் தெறிக்கின்ற மழலை போல ஒரு முந்நூறு மொழிகளில் வார்த்தை இல்லை ஆண் : தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே ஆண் : வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா ஆண் : பிள்ளை நிலா பள்ளி செல்ல அவள் கையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன் ஆண் : தெய்வ மகள் தூங்கயிலே சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகை கண்டேன் ஆண் : சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது என்னை பெற்றவள் சாயல் என்று பேசிக்கொண்டேன் ஆண் : மேல்நாட்டு ஆடை கட்டி நடந்த போது இவள் மீசை இல்லாத மகன் என்று சொன்னேன் ஆண் : பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே ஒரு பிரிவுக்கு ஒத்திகையை பார்த்துக் கொண்டேன் ஆண் : { வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா } (2) ஆண் : வான் மிதக்கும் கண்களுக்கு மயில் இறகால் மையிடவா மார்புதைக்கும் கால்களுக்கு மணி கொலுசு நான் இடவா